தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்த பெண்கள் உள்பட 8 பேர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டு அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதனையடுத்து காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தேனி அல்லிநகரம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த நாகம்மாள், பேச்சியம்மாள் ஆகியோரின் வீட்டருகே கர்ணன் என்பவர் வீடுகட்டி வாடகைக்கு விட்டுள்ளார். அந்த வீட்டில் குடியிருக்கும் திருநங்கைகள் மூலமாக நாகம்மாள், பேச்சியம்மாள் குடும்பத்தினருக்கு தொந்தரவு கொடுத்து வீட்டை காலி செய்ய ஒருவர் வற்புறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து காவல் நிலையத்தில் பலமுறை புகாரளித்தும் எந்த பலனுமில்லை. இதனால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டோம் என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இ பாஸ் முறை முழுமையாக ரத்து செய்யவில்லை - அமைச்சர் காமராஜ்