ETV Bharat / state

கரோனா: உத்தமபாளையத்தில் 8 நாள்கள் முழு கடையடைப்பு - eight days complete lockdown imposed at uththamapalaiyam

தேனி: கரோனா வைரஸ் அதிகளவு பரவிவருவதையடுத்து உத்தமபாளையம் பகுதியில்  எட்டு நாள்களுக்கு முழு கடையடைப்பு அமல்படுத்தப்படவுள்ளதாக பேரூராட்சி அறிவித்துள்ளது.

eight days complete lockdown imposed at uththamapalaiyam

author img

By

Published : Jul 14, 2020, 10:20 PM IST

தேனி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுவருகிறது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் அதிகமானோர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இதுவரையிலும் தேனி மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரண்டாயிரத்தை எட்டவுள்ளது. இறப்பு விகிதமும் நாள்தோறும் அதிகரித்துவருகிறது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில், கரோனா வைரஸை கட்டுபடுத்த தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, சின்னமனூர் கூடலூர் ஆகிய நகராட்சி, பேரூராட்சியில் கடந்த சில நாள்களாக முழு கடையடைப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்போது உத்தமபாளையம் பேரூராட்சியிலும் வணிகர்கள் தாமாக முனவந்து எட்டு நாள்களுக்கு கடைகள் அடைப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இன்று (ஜூலை14) நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து வணிகர்களுடன் ஆலோசனை செய்து ஒரு மனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பேரூராட்சி மற்றும் காவல்துறையினரிடம் வணிகர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, கரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் வரும் ஜூலை 19 முதல் 26ஆம் தேதி வரையில் உத்தமபாளையத்தில் அனைத்து கடைகளையும் முழு கடையடைப்பு செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு செய்வதாக தீர்மானிக்கப்பட்டதாக வணிகர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தாமிரபரணி குடிநீரை தடுத்தவர்கள் மீது வழக்கு - ஜூலை 27ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.