தேனி: பெரியகுளம் அருகே பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள வேட்டுவன் கண்மாய், ஓட்டக்குளம் கண்மாய் மற்றும் பொம்மிநாயக்கன்பட்டி கண்மாய்க்கு ராஜ வாய்க்காலில் நீர் கொண்டு வந்து நிரப்பப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்று நீரை ராஜ வாய்க்கால் மூலம் கொண்டு சென்று கண்மாய்களில் நீர் நிரப்பும் பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ராஜ வாய்க்கால் முறையாகக் கரை பலப்படுத்தப்படாததால் கரையில் உடைப்பு ஏற்பட்டு வாய்க்காலில் வரும் நீர் அனைத்தும் அப்பகுதியில் உள்ள விலை நிலங்களில் சென்று சேர்வதால் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வாழை, பருத்தி, கத்திரி, வெண்டைக்காய் உள்ளிட்ட பயிர்களைச் சேதப்படுத்தி வருகிறது.
எனவே உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ராஜ வாய்க்காலில் ஏற்பட்டுள்ள உடைப்பை உரிய ஆய்வு செய்து விலை நிலங்களுக்குள் நீர் புகுவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க:இனிப்பில் டால்டாவா? - மறுப்பு தெரிவித்த ஆவின் நிர்வாகம்