தேனி: கேரளா மாநிலம் மூணாறு பூப்பாறை தேசிய நெடுஞ்சாலையில் அவ்வப்போது கொம்பன் என அழைக்கப்படும் ஆண் காட்டு யானை சாலையின் நடுவே நிற்பதும் சாலையில் செல்லும் வாகனங்களை துரத்துவதும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது.
இதனால் இந்தப் பகுதி செல்லும் வாகன ஓட்டிகள் பல்வேறு இன்னலுக்கும் ஆளாகி வருகின்றனர். இந்த சூழலில் கொம்பன் யானை வழக்கம் போல வனப்பகுதியை விட்டு சாலையில் நின்று கொண்டிருந்தது. இதனால் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாத சூழல் நிலவியது.
இந்த நிலையில் அந்த வழியாக வந்த வனத்துறை ஊழியர் சக்திவேல் தனது இரு சக்கர வாகனத்தில் நேரடியாக யானை அருகே சென்று கொம்பன் இடம் "போடா இங்கே நிற்காதே இங்கு உனக்கு என்ன வேலை நீ நிற்பதால் எல்லோரும் பயப்படுறாங்க போடா காட்டுக்குள்" என செல்லமாக கூறியதை அடுத்து அதனை ஏற்றுக் கொள்ளும் விதமாக கொம்பன் காட்டு யானை சாலையை விட்டு அருகே உள்ள ஏலத் தோட்டத்தில் மேடான பகுதியில் ஏற முடியாமல் ஏறிச் சென்று பின்னர் வனப்பகுதிக்கு சென்றது. யானை சென்ற பின்னர் அந்தப் பகுதியில் போக்குவரத்து சீரானது.
வனத்துறை ஊழியரின் பேச்சை புரிந்து கொண்டு அதனை ஏற்றுக் கொண்டு காட்டு யானை அவர் சொன்ன சொல்லை தட்டாமல் காட்டுக்குள் சென்ற நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் கடந்த 4 மாதங்களில் 3 மிகப்பெரிய சம்பவம்... கோட்டைவிட்டதா உளவுத்துறை?... காரணம் என்ன?