ETV Bharat / state

பிரதமரை தமிழகத்திலிருந்து செல்லும் 39 சுயேச்சை வேட்பாளர்கள்தான் தீர்மானிப்பார்கள்: டிடிவி சூளுரை! - அமமுக

தேனி: இந்தியாவின் பிரதமரை தமிழ்நாட்டிலிருந்து செல்கின்ற 39 சுயேச்சை வேட்பாளர்கள்தான் தீர்மானிப்பார்கள் என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

dinakaran
author img

By

Published : Apr 5, 2019, 11:43 PM IST

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று தேனி மாவட்டத்தில் அமமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். இதில் தேனி மக்களவைத்தொகுதி வேட்பாளர் தங்க தமிழ் செல்வன், பெரியகுளம் (தனி) சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கதிர்காமு ஆகியோர்களை ஆதரித்து தேவதானப்பட்டி, பெரியகுளம் உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரித்தார்.

பெரியகுளம் மூன்றாந்தல் பகுதியில் பேசிய டிடிவி தினகரன், "பெண்ணாசையால் ஏற்பட்டது ராமாயணம், மண்ணாசையால் உண்டானது மகாபாரதம், மகாபாரதத்தில் துரியோதனன் அழிந்தது போன்று, நமக்கு துரோகம் செய்த துரியோதனக்கூட்டம் இந்த தேர்தலில் அழிந்து விடுவார்கள். அமமுகவை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யாததால் அங்கீகாரம் பெறாத கட்சி என்கிறார்கள். ஆனால் மக்களின் மனங்களில் அமமுக பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்கின்ற மோடியை மக்கள் ஓட, ஓட விரட்டுவார்கள், அவருக்கு காவடி தூக்குகின்ற அம்மாவின் பெயரையும், சின்னத்தையும் கொண்டுள்ள போலிகளையும் தமிழ்நாடு மக்கள் ஓட ஓட விரட்டுவார்கள்.

ஆட்சியை பிடிப்பதற்காக பாஜகவின் கால்களை பிடித்து துணை முதலமைச்சர் பதவியை பெற்றவர் ஓபிஎஸ். வருங்கால இந்தியாவை தமிழ்நாடுதான் தீர்மானிக்க போகிறது. இந்தியாவின் பிரதமரை தமிழ்நாட்டிலிருந்து செல்கின்ற 39 சுயேச்சை வேட்பாளர்கள்தான் தீர்மானிப்பார்கள். சட்டமன்ற இடைத்தேர்தலில் 18 தொகுதிகளில் 6 தொகுதியில் வெற்றி பெறாவிட்டால் இந்த துரோக ஆட்சியாளர்கள் வீட்டுக்கு போய் பழைய தொழிலைதான் பார்க்க வேண்டும். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வர முயற்சிக்கிறது. ஆனால் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் மக்கள் இந்த கட்சிகளை புறக்கணித்து வருகின்றனர். இந்த தேர்தலில் அவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள்" என்றார்.

Intro: இந்தியாவின் பிரதமரை தமிழகத்தில் இருந்து செல்கின்ற 39சுயேட்சை வேட்பாளர்கள் தான் தீர்மானிப்பார்கள். பெரியகுளத்தில் அமமுக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்ட டிடிவி தினகரன் பேச்சு.

Body: அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று தேனி மாவட்டத்தில் அமமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். இதில் தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் தங்க தமிழ் செல்வன், பெரியகுளம் (தனி) சட்ட மன்ற தொகுதி வேட்பாளர் கதிர்காமு ஆகியோர்களை ஆதரித்து தேவதானப்பட்டி, பெரியகுளம் உள்ளிட்ட இடங்களில் பரப்புரை செய்தார்.
பெரியகுளம் மூன்றாந்தல் பகுதியில் பேசிய டிடிவி தினகரன், பெண்ணாசையால் ஏற்பட்டது ராமாயணம், மண்ணாசையால் உண்டானது மகாபாரதம், மகாபாரதத்தில் துரியோதனன் அழிந்தது போன்று, நமக்கு துரோகம் செய்த துரியோதன கூட்டம் இந்த தேர்தலில் அழிந்து விடுவார்கள் என்றார். அமமுகவை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யாததால் அங்கீகாரம் பெறாத கட்சி என்கிறார்கள். ஆனால் மக்களின் மனங்களில் அமமுக பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
தமிழகத்திற்கு துரோகம் செய்கின்ற மோடியை மக்கள் ஓட, ஓட விரட்டுவார்கள், அவருக்கு காவடி தூக்குகின்ற அம்மாவின் பெயரையும், சின்னத்தையும் கொண்டுள்ள போலிகளையும் தமிழக மக்கள் ஓட ஓட விரட்டுவார்கள். ஆட்சியை பிடிப்பதற்காக பாஜகவின் கால்களை பிடித்து துணை முதல்வர் பதவியை பெற்றவர் ஓபிஎஸ் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், வருங்கால இந்தியாவை தமிழகம் தான் தீர்மானிக்க போகிறது. இந்தியாவின் பிரதமரை தமிழகத்தில் இருந்து செல்கின்ற 39சுயேட்சை வேட்பாளர்கள் தான் தீர்மானிப்பார்கள் என்று பேசினார். மேலும் சட்ட மன்ற இடைத்தேர்தலில் 18தொகுதிகளில் 6தொகுதியில் வெற்றி பெறாவிட்டால் இந்த துரோக ஆட்சியாளர்கள் வீட்டுக்கு போய் பழைய தொழிலை தான் பார்க்க வேண்டும். மேலும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வர முயற்சிக்கிறது. ஆனால் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மக்கள் இந்த கட்சிகளை புறக்கணித்து வருகின்றனர். இந்த தேர்தலில் அவர்களை புறக்கணிப்பார்கள் என்றார்.

Conclusion: இந்த கூட்டத்தில் பெரியகுளம், மூன்றாந்தல், தாமரைக்குளம் உள்ளிட்ட இடங்களில் நின்றிருந்த மக்கள் வழிநேடுகிலும் தினகரனை வரவேற்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.