தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் மூன்றாவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மாநில, மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் மாநிலங்களுக்கிடையே அத்தியாவசியத் தேவைகளுக்காக பயணிப்பவர்கள் அந்தந்த மாவட்ட எல்லைகளில் சுகாதாரத்துறையினரால் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இந்நிலையில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து சொந்த ஊரான பெரியகுளத்திற்குத் திரும்பினார். பெரியகுளம் நோக்கி திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாவட்ட எல்லையான காட்ரோடு பகுதியில் வந்த போது, ஓ.பன்னீர்செல்வம் தன்னை சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டார்.
சோதனைச் சாவடியில் உள்ள மருத்துவக்குழுவினர் துணை முதலமைச்சருக்கு கரோனா அறிகுறி இருக்கிறதா என பரிசோதித்தனர். இதில் அவருக்கு நோய்த் தொற்று இல்லை என தெரியவந்தது.
இதையும் படிங்க: நெய்வேலி என்எல்சியில் பாய்லர் வெடித்து விபத்து!