தேனி மாவட்டம், போடியில் ஐக்கிய பிள்ளைமார் சங்கத்தின் சார்பில் நிறுவப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் திருவுருவ வெண்கலச் சிலையைத் திறந்து வைக்க, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சென்றிருந்தார்.
கூட்டத்தில் பங்கேற்ற பிள்ளைமார் சமுதாய இளைஞர்களும், பெண்களும் துணை முதலமைச்சருக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதன் காரணமாக கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், துணை முதலமைச்சருக்கு எதிராக கண்டன குரல்களை எழுப்பியவர்களை குண்டுக்கட்டாக தூக்கி, அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதையும் படிங்க: 'சீட்டுக்காக யாரிடமும் யாசிக்க மாட்டேன்' நாஞ்சில் சம்பத்