விநாயகர் சதுர்த்தி பொதுவாக 11 நாள்களாக நாட்டின் பல பகுதிகளில் கொண்டாடப்பட்டுவருகிறது. தமிழ்நாட்டில் இன்று (ஆக22) ஆரவாரமின்றி அனைத்து விநாயகர் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடைபெறுகின்றன.
கரோனா பரவல் காரணமாக வழக்கமான கொண்டாட்டங்களுக்கு அரசு தடைவிதித்து, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தியை வழிபட அறிவுறுத்தியது.
இந்நிலையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது சொந்த ஊரான பெரியகுளத்தில் உள்ள விநாயகர் கோயிலில் சாமி தரிசனம்செய்தார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள வரசக்தி விநாயகர் திருக்கோயிலில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதில், அவர் கலந்துகொண்டு சாமி தரிசனம்செய்தார். இதனைத் தொடர்ந்து கோயில் சார்பில் துணை முதலமைச்சருக்கு பரிவட்டம் கட்டி மரியதை செய்யப்பட்டது.
இதையும் படிங்க: முதலமைச்சர் வீட்டில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடு!