ETV Bharat / state

‘சுற்றுலா பயணமாகவே முதலமைச்சர் வெளிநாடு சென்றார்’ - பாலகிருஷ்ணன் தாக்கு

தேனி: முதலமைச்சரின் வெளிநாட்டு சுற்றுப் பயணம் அவரின் ஓய்வுக்கும், சுற்றுலாவிற்கும் மட்டுமே பயன்பட்டிருக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பாலகிருஷ்ணன்
author img

By

Published : Sep 10, 2019, 6:06 PM IST

தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ‘பாஜகவினர் நரேந்திர மோடியின் 100 நாள் ஆட்சியை கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்திய வரலாற்றில் இந்த 100 நாட்கள் துயரம் மிகுந்த நாட்களாக இருக்கிறது. ஏனென்றால் இந்த நாட்களில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தவில்லை. நாட்டில் இதுவரை எந்த ஒரு பொருளாதார நெருக்கடியும் இல்லை என்று கூறி வந்த மத்திய அரசு, தற்போது அதனை ஒத்துக்கொள்வதாகத் தெரிகிறது. அதன் வெளிப்பாடுதான் ரிசர்வ் வங்கியின் உபரி நிதி ரூபாய் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடியை கைப்பற்றி பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்துவதாக அறிவித்துள்ளது.

கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் அவரின் ஓய்வுக்கும் சுற்றுலாவிற்கும் மட்டுமே பயன்படும். இதனால் எந்த ஒரு முதலீடுகளையும் பெற முடியாது. உலகப் பொருளாதாரப் போர் நடைபெற்று வரும் சூழலில், எந்த ஒரு நாட்டிலிருந்தும் முதலீடுகளைப் பெற இயலாது. இதற்கு மாற்றாக உள்நாட்டில் மூடப்பட்டுள்ள சர்க்கரை ஆலைகள், நூற்பாலைகள், சிறு மற்றும் குறு தொழிற்சாலைகளை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.

Intro: முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப் பயணம் அவரின் ஓய்வுக்கும், சுற்றுலாவிற்கு மட்டும் பயன்பட்டிருக்கும். வெளிநாட்டு முதலீடுகள், மூலதனங்களை பெற்றத்தராது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தேனியில் பேட்டி.

Body: தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். தேனியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் பேசிய அவர், பாஜகவினர் நரேந்திர மோடியின் 100நாள் ஆட்சியை கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்திய வரலாற்றில் இந்த 100 நாட்கள் துயரம் மிகுந்த நாட்களாக இருக்கிறது.ஏனென்றால் இந்த நாட்களில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தவில்லை.நாட்டில் இதுவரை எந்த ஒரு பொருளாதார நெருக்கடி இல்லை என்று கூறி வந்த மத்திய அரசு, தற்போது அதனை ஒத்துக் கொள்வதாக தெரிகிறது. அதன் வெளிப்பாடுதான் ரிசர்வ் வங்கியின் உபரி நிதி ரூபாய் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடியை கைப்பற்றி பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்துவதாக அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு வருவதாக கூறி வந்த பாஜக தற்போது ரிசர்வ் வங்கியின் உபரி நிதி யை எடுத்து கார்ப்பரேட் நிறுவனத்துக்கு கொடுத்து வருவதாக குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர் முதல்வரின் வெளிநாட்டு பயணம் அவரின் ஓய்வுக்கும் சுற்றுலாவிற்கு மட்டும் பயன்படும். இதனால் எந்த ஒரு முதலீடுகளையும், மூலதனங்களை பெறமுடியாது. உலகப் பொருளாதாரப் போர் நடைபெற்று வரும் சூழலில், எந்த ஒரு நாட்டிலிருந்து முதலீடுகள் பெற இயலாது. இதற்கு மாற்றாக உள்நாட்டில் மூடப்பட்டுள்ள சர்க்கரை ஆலைகள், நூற்பாலைகள், சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் திறப்பதற்கு உண்டான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றார்.
மேலூரில் தலித் ஒருவரின் இறுதி சடங்கில் நிகழ்ந்த சம்பவம் வேதனைக்குரியது. இச்சம்பவத்தை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேளையில், அப்பகுதி தாசில்தார் நீதிமன்றத்தில் ஆஜராகி தலித் மக்களுக்கு தனி சுடுகாடு வழங்குகின்றோம் என்கிறார். ஆனால் இந்திய அரசியல் அமைப்பில் எந்த ஒரு சாதியினருக்கும் தனி சுடுகாடு என்பது கிடையாது. இது போன்ற செயல் அரசியலமைப்புச் சட்டத்தை அரசாங்கமே அவமானம் செய்வதாகும். எனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகத்தில் பொது சுடுகாடு அமைக்க வேண்டும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சமூகநீதியை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் என்றார்.
மேலும் தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வரும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை எதிர்த்து பல ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது. அப்பகுதி மக்களை வெளியேற்றுழதை விட்டு அவர்களுக்கு பட்டா வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் தமிழகத்தில் உள்ள எந்த ஒரு அருவியிலும் கட்டணம் வசூலிக்க நிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவியில் மட்டும் கட்டணம் வசூலிப்பது கூடுதலாக உள்ளது. இயற்கையாகவே வருகின்ற நீரில் குளிப்பதற்கு கட்டணம் வசூலிப்பது, மலை மாடுகளை மேய்ப்பதற்கு அனுமதி மறுப்பது போன்ற நடவடிக்கைகளால் தேனி மாவட்ட வனத்துறை தனி அதிகாரம் படைத்த சமஸ்தானமாக உள்ளது. எனவே இவற்றையெல்லாம் ரத்து செய்ய வேண்டும் என்றார்.
மேலும் தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் குடிநீருக்காக அரசு செலவிட்ட தொகையை நீர் மேலாண்மை திட்டங்களில் அக்கறை காட்டி இருக்கலாம். இதனை தவிர்த்து விலை கொடுத்து தண்ணீர் வாங்கி விநியோகிப்பதால் தண்ணீர் வியாபாரம் உள்ளதாக தெரிவித்தார்.

Conclusion:
பேட்டி: பாலகிருஷ்ணன் மாநில செயலாளர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.