தேனி மாவட்ட ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 12 வார்டுகளில் திமுக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 7 பேர், அதிமுகவைச் சேர்ந்த 5 பேர் ஆகியோர் கவுன்சிலர்களாக உள்ளனர்.
தேனி ஒன்றியக்குழு தலைவராக திமுகவைச் சேர்ந்த சக்கரவர்த்தி, துணைத் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முருகன் ஆகியோர் பதிவி வகிக்கின்றனர். இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுகவைச் சேர்ந்த பெண் கவுன்சிலர்கள் அன்புமணி, சங்கீதா ஆகிய 2 பேர் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மற்ற அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
அப்போது அவர்கள் தங்கள் பகுதிக்கு நிதி ஒதுக்குவதில் பாரப்பட்சம் காட்டுவதாக குற்றஞ்சாட்டினர். அதற்கு ஒன்றியக்குழு தலைவர் சக்கரவர்த்தி சரியாக நிதி ஒதுக்கீடு செய்வதாக கூறினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் தர்ணாவில் ஈடுபட்ட பெண்கள் பேசுகையில், "திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர்கள் வார்டுகளில் பணிகள் நடைபெறுகின்றன. அதிமுக கவுன்சிலர்கள் வார்டுகளுக்கு நிதி ஒதுக்குவதில் பாரப்பட்சம் நடக்கிறது" என்றனர்.
இதையும் படிங்க: கூட்டுறவு சங்க முறைகேடுகளை விசாரிக்கும் கால அளவு குறைப்பு!