ETV Bharat / state

வெளிமாவட்ட பயணிகளுக்கு எல்லைப்பகுதியிலேயே கரோனா பரிசோதனை! - theni news in tamil

தேனி: சிவப்பு மண்டலங்களிலிருந்து வருபவர்களுக்கு எல்லைப்பகுதியில், கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணியில் சுகாதாரத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

வெளிமாவட்ட பயணிகளுக்கு எல்லைப்பகுதியிலேயே கரோனா பரிசோதனை!

author img

By

Published : May 3, 2020, 5:24 PM IST

கரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த, நாடு முழுவதும் மூன்றாவது முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவற்றில் திருமணம், மருத்துவம், இறப்பு உள்ளிட்ட தவிர்க்க முடியாத நிகழ்வுகளுக்கு மட்டும் விலக்களிக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியோடு பொதுமக்கள் சென்று வருவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கரோனா பெருந்தொற்று அதிகம் கண்டறியப்பட்ட சென்னை, கோவை உள்ளிட்ட சிவப்பு மண்டலங்களில் இருந்து, தேனி மாவட்டத்திற்கு வருபவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

வெளிமாவட்ட பயணிகளுக்கு எல்லைப்பகுதியிலேயே கரோனா பரிசோதனை!

இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாவட்ட எல்லையான காட்ரோடு பகுதியில் சுகாதாரம் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுவருகின்றனர். சிவப்பு மண்டல பகுதிகளில் இருந்து வருபவர்களுக்கு, தேவதானப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று, கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

நான்கு முதல் 5 மணி நேரத்தில் பரிசோதனை முடிவுகள் கிடைப்பதால், பயணிகள் அங்குள்ள தனியார் பள்ளியில் தங்க வைக்கப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றனர். கரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்படவில்லையெனில், மாவட்டத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

இன்று காலை முதல் மதியம் வரை வெளிமாவட்டங்களில் இருந்து வந்த 70 நபர்களுக்கு, கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சுட்டெரிக்கும் வெயில்... தவிக்கும் சங்குவளை நாரைகள்: பாலைவனமான பறவைகள் உய்விடம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.