தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வுபெற்றார். குழந்தைகள் நல மருத்துவரான இவர், தனது வீட்டின் ஒரு பகுதியை கிளினிக்காக மாற்றி கடந்த 15 ஆண்டுகளாக குழந்தைகளுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டதால் தாமாகவே முன் வந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனை முடிவு நேற்றிரவு ( ஜூன் 11) வந்தது. அதில் அவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட மருத்துவர் வீடு, கிளினிக் ஆகிய பகுதிகள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு அடைக்கப்பட்டன.
வெளி நபர்கள் உள்ளே செல்லாதவாறு தடுப்பு கட்டைகள் அமைத்து தெருக்களின் நுழைவு வாயில்களை அடைக்கும் பணியில் நகராட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மருத்துவரின் குடும்பத்தினர், உறவினர்கள், அவரிடம் மருத்துவம் செய்து கொண்ட குழந்தைகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளது.
குழந்தைகள் நல மருத்துவருக்கு கரோனா தொற்று! - குழந்தைகள் நல மருத்துவருக்கு கரோனா தொற்று
தேனி: பெரியகுளத்தில் குழந்தைகள் நல மருத்துவர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.