ETV Bharat / state

தேனியில் இன்று 360 பேருக்கு கரோனா உறுதி! - கரோனா உயிரிழப்புகள்

தேனி: மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 9) ஒரே நாளில் 360 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டத்தை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 7,898 ஆக உயர்ந்துள்ளது.

Corona guaranteed for 360 people in Theni today!

author img

By

Published : Aug 9, 2020, 8:36 PM IST

தேனி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து, பொதுமக்களை பெரிதும் அச்சுறுத்தி வருகிறது. வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கையை போல, உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் தேனி மாவட்டம் அம்மாபட்டியை சேர்ந்த அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர், ஆண்டிபட்டி அருகே அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர், போடி சில்லமரத்துப்பட்டியை சேர்ந்த தனியார் நடுநிலைப் பள்ளி ஆசிரியர், கூடலூர் வடக்கு காவல்நிலைய சார்பு ஆய்வாளர், போடி தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர், உள்பட இன்று ஒரே நாளில் 360பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 7,898ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 94ஆக அதிகரித்துள்ளது.

மேலும் மாவட்டத்தில் தற்போது வரை 4,790பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல் 3,014பேர் மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.