தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகிலுள்ள சிலோன் காலனியில் வசித்து வரும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர், ஆசிரியை, அண்ணா கூட்டுறவு நூற்பாலை பணியாளர் மற்றும் சின்னமனூர் காவலர் குடியிருப்பில் வசிக்கும் தனிப்பிரிவு தலைமைக் காவலர் என ஒரே நாளில் 184 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்து 048ஆக உயர்ந்துள்ளது. நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களில் ஆயிரத்து 942 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். 9 ஆயிரத்து 968 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நோய்த் தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் என தேனி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 061 நபர்களிடம் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் இன்று சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: கரோனா கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை: வருகிறது அவசரச் சட்டம்!