ETV Bharat / state

’ஜெயலலிதா வழியில் உள்ளாட்சியில் மறைமுகத் தேர்தல்’ - ஓபிஎஸ் கருத்து - Local indirect election

தேனி: ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலேயே உள்ளாட்சியில் மறைமுகத் தேர்தல் நடத்தப்பட்டது என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

theni
author img

By

Published : Nov 21, 2019, 5:15 AM IST

66ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு பயனாளிகளுக்கு கடனுதவிகள், நலத்திட்டங்கள் வழங்கும் விழா தேனியில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கான கேடயங்கள், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், 551 பயனாளிகளுக்கு ரூ.7.49 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றது முழு வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டுக்கு உரிய நன்மைகள் கிடைக்கும். ரஜினி, கமல் இருவரும் மிகச்சிறந்த நடிகர்கள், தேர்தலில் இருவரும் இணைந்து பணியாற்றிய பிறகு இருவரது அரசியல் குறித்து பதிலளிக்கிறேன்.” என்று தெரிவித்தார்.

அஜித் குறித்து ஓபிஎஸ்:

அஜித் அரசியலுக்கு வர வேண்டும் என்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி, இயக்கங்களை ஆரம்பிக்கலாம் என்றார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலேயே உள்ளாட்சியில் மறைமுகத் தேர்தல் நடத்தப்பட்டது. தற்போது அவரது வழியில் செயல்படும் அதிமுக அரசும் அவ்வழியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உள்ளது என்று கூறினார்.

உள்ளாட்சி மறைமுகத் தேர்தல் குறித்து ஓபிஎஸ் கருத்து

மேலும், தமிழ்நாட்டில் எப்போது உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டாலும் அதை சந்திக்க அதிமுக தயாராகி வருகிறது என்றும், தேர்தலில் அதிமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும் எனவும் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மறைமுக தேர்தலும், அதிமுகவின் ராஜ தந்திரமும்...!

Intro: ஜெயலலிதா ஆட்சி காலத்திலேயே உள்ளாட்சியில் மறைமுகத் தேர்தல் நடத்தப்பட்டது. துணை முதல்வர் ஓபிஎஸ் தேனியில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் பேட்டி..

Body: 66 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு மதுரை மாவட்ட கூட்டுறவு வங்கி கிளைகள் மற்றும் இணைப்பு கூட்டுறவு கடன் சங்கங்கள் சார்பில் இன்று பயனாளிகளுக்கு கடனுதவிகள் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா தேனியில் நடைபெற்றது. தேனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில் தமிழக துணை முதல்வர்
ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கான கேடயங்கள், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் 551 பயனாளிகளுக்கு ரூ.7.49கோடி மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன் மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள், பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றது முழு வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழகத்திற்கு உரிய நன்மைகள் கிடைக்கும். ரஜினி, கமல் இருவரும் மிகச்சிறந்த நடிகர்கள், தேர்தலில் இருவரும் இணைந்து பணியாற்றிய பிறகு இருவரது அரசியல் குறித்து பதிலளிக்கிறேன் என்றார். அஜீத் அரசியலுக்கு வர வேண்டும் என்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சிகள், இயக்கங்களை ஆரம்பிக்கலாம் என்றார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்திலேயே உள்ளாட்சியில் மறைமுகத் தேர்தல் நடத்தப்பட்டது. தற்போது அவரது வழியில் செயல்படும் அதிமுக அரசும் அவ்வழியில் உள்ளாட்சி தேர்தலை நடத்து உள்ளதாகத் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் எப்போது உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டாலும் அதனை சந்திக்க அதிமுக தயாராகி வருகிறது. தேர்தலில் அதிமுக பெரும்பான்மையான வெற்றி பெறும் என்றார்.
இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்ஷே வெற்றி பெற்றுள்ளது குறித்து கூறுகையில், இலங்கை மட்டுமல்ல உலகத்தில் எந்தவொரு மூலையிலும் தமிழர்களுக்கு பாதிப்பு என்றால், அதிமுகவும், அதிமுக அரசு அதனை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்.
ஐஐடி மாணவி தற்கொலை குறித்து கூறுகையில், படிப்பதற்காக வந்துள்ள மாணவியின் தற்கொலை குறித்து விசாரணை நடக்கிறது, முடிந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Conclusion: பேட்டி : ஓ.பன்னீர்செல்வம் ( துணை முதல்வர்)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.