ETV Bharat / state

நீட் தேர்வு ஆள்மாறாட்டம்: கல்லூரி முதல்வர் பரபரப்பு தகவல்! - student irfan arrested

தேனி: தருமபுரி மருத்துவக் கல்லூரி மாணவர் இர்ஃபான் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக கல்லூரி முதல்வரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது.

எஸ்.பி.விஜயகுமார்
author img

By

Published : Oct 1, 2019, 3:55 PM IST

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த குற்றச்சாட்டு தொடர்பாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சீனிவாசராஜிடம் இன்று சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனியில் உள்ள அலுவலகத்தில் தென்மண்டல சிபிசிஐடி தலைமையில் நடைபெற்று வரும் இந்த விசாரணையில், கல்லூரி முதல்வரிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டு அதற்கு உரிய விளக்கத்தை அவர் அளித்து வருகின்றார்.

செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.விஜயகுமார்

மேலும், இர்ஃபானின் தந்தை முகமது சபியிடமும் சிபிசிஐடி காவல் துறையினர் நேற்று முதல் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.விஜயகுமார், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவர் இர்ஃபான் படித்து வந்தது கல்லூரி முதல்வரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கான உரிய ஆவணங்களை அவர் சமர்பித்துள்ளார். அவரிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்த இர்ஃபான் குறித்து விசாரித்து வருகின்றோம். மேலும், இர்ஃபானின் தந்தை முகமது சபியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவது குறித்து இன்று மாலை தெரியவரும் என்றார்.

மேலும், தலைமறைவாக இருந்த மாணவர் இர்ஃபான் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இர்ஃபானை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு சிபிசிஐடி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Intro: தருமபுரி மருத்துவக் கல்லூரி மாணவர் இர்பான் ஆள்மாறாட்டம் செய்துள்ளதாக கல்லூரி முதல்வரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிபிசிஐடி எஸ்பி விஜயகுமார் தகவல்..

Body: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த குற்றச்சாட்டு தொடர்பாக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சீனிவாசராஜிடம் இன்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனியில் உள்ள அலுவலகத்தில் தென்மண்டல சிபிசிஐடி தலைமையில் நடைபெற்று வரும் இவ்விசாரணையில், கல்லூரி முதல்வரிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டு அதற்கு உரிய விளக்கத்தை அவர் அளித்து வருகின்றார்.
மேலும் இர்பானின் தந்தை முகம்மது சபியிடமும் சிபிசிஐடி போலீசார் நேற்று முதல் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.விஜயகுமார், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவர் இர்பான் படித்து வந்தது கல்லூரி முதல்வரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கான உரிய ஆவணங்களை அவர் சமர்பித்துள்ளார். அவரிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்த இர்பான் குறித்து விசாரித்து வருகின்றோம். மேலும் இர்பானின் தந்தை முகம்மது சபியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவது குறித்து இன்று மாலை தெரியவரும்.

Conclusion: இதனிடையே தலைமறைவாக இருந்த மாணவர் இர்பான் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இர்பானை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு சிபிசிஐடி சார்பில் மனுத்தாக்கல் செய்யலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.