'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' எனும் நிகழ்ச்சி இன்று (பிப்ரவரி 18) தேனி மாவட்டத்தில் நடைபெற்றது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று பொதுமக்களிடம் கலந்துரையாயாடி, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து பின்னர் சிறப்புரையாற்றினார்.
தேனி வடக்கு, தெற்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அழைத்து வரப்பட்ட ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்து ஸ்டாலின் கிளம்பியதும், கூட்டத்தில் பங்கேற்பதற்காக அழைத்து வரப்பட்ட பொதுமக்களுக்கு வெளியே வைத்து பணப்பட்டுவாடா நடைபெற்றது. இதில் பணம் கொடுக்கும் நபர்களுடன் ஒரு சில பெண்கள் மீண்டும் பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: இளைஞர்களின் எதிர்ப்புக் குரல்களுக்கு பாஜக செவிமடுக்கவேண்டும் - ஸ்டாலின் காட்டம்