ETV Bharat / state

வங்கி ஊழியர்கள் நெருக்கடியால் கார் ஓட்டுநர் தற்கொலை: வங்கியை முற்றுகையிட்ட உறவினர்கள்! - driver commits suicide

தேனி: கரோனா ஊரடங்கு காலத்தில் கடனைச் செலுத்துமாறு வங்கி ஊழியர்கள் நெருக்கடி தந்ததால் கார் ஓட்டுநர் தற்கொலை செய்ததால், அவரின் உறவினர் வங்கியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

வங்கி ஊழியர்கள் நெருக்கடியால் தற்கொலை செய்த கார் ஒட்டுநர்: வங்கியை முற்றுகையிட்ட உறவினர்கள்!

author img

By

Published : Nov 7, 2020, 8:37 PM IST

தேனி அருகே உள்ள அல்லிநகரம் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (45). வாடகை கார் ஓட்டுநரான இவருக்கு பவுன்தாய் என்ற பெண்ணுடன் திருமணமாகி ரேணுகா, தேவி, ரம்யா என்ற மூன்று மகள்கள் உள்ளனர். தொழிலுக்காக 2019ஆம் ஆண்டு தேனியில் உள்ள தனியார் வங்கியில் ரூ.9 லட்சம் கார் கடன் பெற்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து முறையாக கடனைச் செலுத்திவந்த நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக போதிய வருவாய் இன்றி கடந்த 6 மாதங்களாக வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருந்துள்ளார். இதன் காரணமாக கடந்த சில தினங்களாகச் சம்பந்தப்பட்ட வங்கி ஊழியர்கள் முருகனிடம் கடனைக் கட்டச்சொல்லி தொடர்ந்து நெருக்கடி தந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த முருகன், கடந்த அக்டோபர் 5ஆம் தேதி அல்லிநகரம் வீரப்ப அய்யனார் மலைக்கோவில் செல்லும் வழியில் உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அல்லிநகரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

வங்கியை முற்றுகையிட்ட உறவினர்கள்!

இதனிடையே முருகன் தற்கொலைக்கு முன், தனது மகள் ரம்யாவிடம், வங்கி ஊழியர்கள் தந்த நெருக்கடியால் தற்கொலை செய்யப்போவதாக செல்போனில் கூறியது மட்டுமல்லாமல் தான் பேசுவதை பதிவு செய்து வைத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.

இதனையடுத்து இன்று (நவ. 7) தற்கொலை செய்துகொண்ட முருகனின் உறவினர்கள், தற்கொலைக்குத் தூண்டிய வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேனியில் உள்ள தனியார் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் காவல் துறை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பட்டதையடுத்து கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க...கன்னியாகுமரியில் கழுத்து அறுத்து முதியவர் கொலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.