தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள மேற்குத் தொடர்ச்சி வனப்பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே அவ்வப்போது காட்டுத்தீ பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது. இதனால் காடுகளில் பற்றி எரியும் தீயைக் கட்டுப்படுத்த வனத் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டும், தொடர்ந்து எரிந்த வண்ணமே உள்ளது.
இந்நிலையில் பெரியகுளம் வனச்சரகத்திற்குள்பட்ட லட்சுமிபுரம் அருகே உள்ள சொர்க்கம் வனப்பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஏக்கரில் காட்டுத் தீ பற்றி எரிந்துவருகின்றது. இதனால் வன விலங்குகள் விளைநிலங்களுக்குள் அபாயம் ஏற்படுவது மட்டுமல்லாமல், அரியவகை மரங்கள் தீயில் எரிந்து நாசமாகின.
எனவே பற்றி எரிந்துவரும் தீயைக் கட்டுப்படுத்த வனத் துறையினர் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் எனவும், வனத் துறையினருக்குத் தீத்தடுப்பு கருவிகளை அரசு வழங்கிட வேண்டும் எனவும், வன செயற்பாட்டாளர்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா வைரஸ்; தமிழ்நாட்டின் நிலை என்ன? – அமைச்சர் விளக்கம்