ETV Bharat / state

தேனி அருகே தனியார் எண்ணெய் ஆலையில் பயங்கர தீவிபத்து! - தேனி தீ விபத்து

தேனி: தனியார் காகிதம் மற்றும் எண்ணெய் ஆலையில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் போராடிவருகின்றனர்.

தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்
author img

By

Published : Mar 19, 2019, 7:40 AM IST

Updated : Mar 19, 2019, 2:41 PM IST

தேனி அருகே ரத்தினம் நகரில் உள்ள கருணாகரன் என்பவருக்குச் சொந்தமான காகிதம் மற்றும் எண்ணெய் ஆலை இயங்குகிறது.

இந்நிலையில், வழக்கம்போல் இந்த ஆலையில் தொழிலாளர்கள் நேற்று, இரவு நேரப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக கொதிகலனில் தீ பற்றியுள்ளது. தொடர்ந்து தீ பரவியதால் அச்சமடைந்த தொழிலாளர்கள் தொழிற்சாலையைவிட்டு வெளியேறத்தொடங்கினர்.

தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து தீயை அணைக்கப் போராடினர். ஆனால் ஆலை முழுவதும் காகிதம் மற்றும் எண்ணெய் இருந்ததால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு தீ கொளுந்துவிட்டு எரிந்தது.

இந்தப் பணியில் மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் 40-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தனியார் தண்ணீர் லாரிகள் ஈடுபடுத்தப்பட்டன. தொடர்ந்து, தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் போராடிவருகின்றனர்.

இந்த தீ விபத்தில் ஆலையில் பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 40-க்கும் மேற்பட்டோர் எந்தவித பெரிய காயமுமின்றி மீட்கப்பட்டனர். 10-க்கும் மேற்பட்டோர் சிறிய காயங்களுடன் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Intro: தேனி அருகே தனியார் காகிதம் & எண்ணெய் ஆலையில் பெருந்தீவிபத்து. கட்டுக்கடங்காத தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் சுமார் 4மணி நேரத்திற்கு மேலாக தீவிர போராட்டம்.

Body: தேனி அருகே ரத்தினம் நகரில் உள்ள கருணாகரன் என்பவருக்கு சொந்தமான காகிதம் மற்றும் எண்ணெய் ஆலை உள்ளது. வழக்கம் போல் இந்த ஆலையில் இன்று இரவு நேரப்பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக கொதிகலனில் தீ பற்றியுள்ளது. தொடர்ந்து ஏற்பட்ட தீ பரவியதால் அச்சமடைந்த தொழிலாளர்கள் வெளியேறத்தொடங்கினர்.
தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க போராடினார்கள். ஆனால் ஆலை முழுவதும் காகிதம் மற்றும் எண்ணெய் இருந்ததால் தொடர்ந்து கொழுந்து விட்டு தீ எரியத்தொடங்கியது. சுமார் 2மணி நேரத்திற்கும் மேலாக எரிந்து வரும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இந்த பணியில் மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தனியார் தண்ணீர் லாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த தீ விபத்தில் ஆலையில் பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 40க்கும் மேற்பட்டோர் எந்தவித காயமின்றி மீட்கப்பட்டனர். 10க்கும் மேற்பட்டோர் சிறிய காயங்களுடன் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஆலையின் உள்ளே தீவிபத்தில் வேறு யாரும் சிக்கித்தவிக்கிறார்களா? என தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.
இந்த தீ விபத்தினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவ இடத்திற்கு அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தீ விபத்தால் அச்சத்துடன் உள்ளனர்.

Conclusion: இந்த தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தள்ளதாகத் தெரிகிறது.
Last Updated : Mar 19, 2019, 2:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.