தேனி: பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல், வட்டகனல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதம் இறுதியில் தொடர் கனமழை பெய்தது. இதனால் கும்பக்கரை அருவியில் கடந்த மூன்றாம் தேதி முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாமல் இருந்ததால், அருவிக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து சீரானது. இதனால் கடந்த 3 தினங்களுக்கு முன்பாக சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இன்று விடுமுறை தினம் என்பதால் காலை முதலே கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். அதிலும் சபரிமலை சீசன் என்பதால் கும்பக்கரை அருவிக்கு சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் அருவியில் குளித்து சென்றனர்.
இதையும் படிங்க: ஆண், பெண் குணாதிசயங்களுடன் பிறந்த அதிசய கன்று.. காணக் குவியும் மக்கள் கூட்டம்!