ETV Bharat / state

முத்துராமலிங்கம் ஜெயந்தியையொட்டி விபரீத ஆட்டோ வீலிங் - வைரல் வீடியோ! - ஆட்டோ வீலிங்

தேனி: பசும்பொன் முத்துராமலிங்கம் ஜெயந்தியையொட்டி ஆட்டோ வீலிங்கில் சிலர் ஈடுபடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

wheeling
wheeling
author img

By

Published : Oct 31, 2020, 11:47 AM IST

பசும்பொன் முத்துராமலிங்கத்தின் 113ஆவது பிறந்த நாள் மற்றும் 58ஆவது நினைவு நாளை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரின் நினைவிடம், மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அனுசரிக்கப்பட்டது. இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில், ஆண்டிபட்டியை அடுத்த கானா விலக்கு பகுதியில், பசும்பொன் முத்துராமலிங்கம் சிலைக்கு மாலை அணிவிக்க ஆட்டோவில் வந்த நபர்கள் விபரீதமாக வீலிங் செய்துள்ளனர். ஆட்டோவின் முன்புறம், பின்புறம் மற்றும் பக்கவாட்டு பகுதி என சுமார் 10 பேர் வரை நின்று கொண்டு, ஆட்டோவின் முன்பக்க சக்கரத்தை தூக்கியவாறு வாகனத்தில் சென்றுள்ளனர்.

முத்துராமலிங்கம் ஜெயந்தியையொட்டி ஆட்டோ வீலிங்!

காவல்துறையினர் மறித்தபோதும் அவர்களை கண்டுகொள்ளாமல், உயிருக்கு ஆபத்தான முறையில் சாகசம் என்ற பெயரில் வீலிங் செய்தவாறு ஆட்டோ ஓட்டிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: சித்திரசாவடி அணை அருகே நீரில் மூழ்கி இளைஞர்கள் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.