ETV Bharat / state

தேனியில் ஆட்டோ, கார் கண்ணாடியை உடைத்து திருடர்கள் கைவரிசை! - auto car theft in theni

தேனி: ஆண்டிபட்டி அருகே ஆட்டோ, கார் கண்ணாடியை உடைத்து காரினுள் இருந்த பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Auto Theft in theni
Auto Theft in theni
author img

By

Published : Dec 9, 2019, 6:17 PM IST

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி சுப்புக்காலனி அமைந்துள்ளது. இங்குள்ள காலி இடங்களில் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் தங்களுடைய கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை நீண்டகாலமாக நிறுத்தி வைத்து வந்துள்ளனர். இதை அறிந்த அடையாளம் தெரியாத நபர்கள், நேற்று நள்ளிரவு அப்பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த ரமேஷ், கணேசன் ஆகியோரது கார், காளிதாஸ் என்வரது சரக்கு ஆட்டோவின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே பொருத்தப்பட்டிருந்த டிவிடி பிளேயர், ஸ்பீக்கர் உள்ளிட்டவைகளைத் திருடி சென்றுள்ளனர்.

வழக்கம் போல், இன்று காலை வாகனத்தை எடுக்க வந்த உரிமையாளர்கள் வாகனம் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து பார்த்தபோது பொருட்கள் காணாமல் போனது தெரிய வந்தது. இதுகுறித்து ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் மூவரும் தனித்தனியாக புகார் கொடுத்துள்ளனர்.

கண்ணாடி உடைக்கப்பட்ட கார்

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த ஆண்டிபட்டி காவல்துறையினர் திருட்டில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே தெருவில் அடுத்தடுத்து வாகனங்களில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க:

கஞ்சா விற்பனை: தூத்துக்குடியில் ஐந்து இளைஞர்கள் கைது!

Intro: ஆண்டிபட்டி நகரில் அடுத்தடுத்து 2 கார் மற்றும் ஆட்டோ கண்ணாடிகளை உடைத்து டேப் ரிக்கார்டர் திருட்டு. பொதுமக்கள் அச்சம்.
Body: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி சுப்புக்காலனி தெருவில் உள்ள காலி இடங்களில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுஷைடய கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு சுப்புக்காலனி தெரு பகுதிக்குள் நுழைந்த மர்மநபர்கள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த ரமேஷ், கணேசன் ஆகியோரது கார் மற்றும் காளிதாஸ் என்வரது ஒரு சரக்கு ஆட்டோவின் ஜன்னல் கண்ணாடிகளை கற்களால் உடைத்து, வாகனத்தின் கதவை திறந்து உள்ளே பொருத்தப்பட்டிருந்த டேப் ரிக்கார்டர் மற்றும் ஸ்பீக்கர்களை திருடி சென்று விட்டனர்.
இன்று காலையில் தங்கள் வாகனங்களை கண்ட உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்து, ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் தனிதனியாக புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஆண்டிபட்டி காவல்துறையினர் கார், ஆட்டோவில் திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Conclusion: ஒரே தெருவில் அடுத்தடுத்து வாகனங்களில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.