ETV Bharat / state

தேனி, முன்விரோதத்தில் இளைஞரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை! - இளைஞர் கொலை வழக்கு

தேனி: ஆண்டிபட்டி அருகே சூதாட்டத்தில் ஏற்பட்ட விரோதத்தால் இளைஞரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொலை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
கொலை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
author img

By

Published : Feb 21, 2020, 7:34 PM IST

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மறவபட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன்(45), சிவபாண்டி(26) ஆகியோருக்கிடையே சூதாட்டம் ஆடுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை மனதில் வைத்த சிவபாண்டி கடந்த 2009ஆம் ஆண்டு ராஜேந்திரனின் மகன் ரஞ்சித்குமாரை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார்.

அதில் படுகாயமடைந்த ரஞ்சித்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து ராஜேந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த ஆண்டிபட்டி காவல் துறையினர் சிவபாண்டியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றுவந்த நிலையில் இன்று தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி அப்துல்காதர் தீர்ப்பளித்தார்.

கொலை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

இதனையடுத்து சிவபாண்டியை தகுந்த பாதுகாப்புடன் மதுரை மத்தியச் சிறைக்கு காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.