தேனி: சின்னமனூர் அருகே ஓடைப்பட்டியில் பூங்கா அமைப்பதற்கு தோண்டிய பள்ளத்தில் விழுந்து 8 வயது சிறுமி உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமத்துவபுரம் பகுதியில் தாத்தாவின் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பூங்கா அமைப்பதற்காக தோண்டி வைத்திருந்த 5 அடி பள்ளக் குழியில் எதிர்பாராத விதமாக விழுந்து உயிரிழந்தாள்.
இந்நிலையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்த சிறுமியின் தந்தை, தனது மகள் உயிரிழந்ததற்கு காரணமான பள்ளத்தை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் ஆதரவாளரின் ரூ.50 லட்சத்துடன் மாயமான கார் ஓட்டுநர்