ETV Bharat / state

"ஓபிஎஸ் சுண்டெலி; ஈபிஎஸ் யானை" திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி - ஓ பன்னீர்செல்வம்

தேனியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஓபிஎஸ் சுண்டலி, ஈபிஎஸ் யானை, யானையுடன் சுண்டெலியை ஒப்பிடுவது அவமானம் என கருத்து தெரிவித்துள்ளது.

ஓபிஎஸ்-ஐ விமர்சித்து பேசிய திண்டுக்கல் சீனிவாசன்

author img

By

Published : Jan 22, 2023, 1:43 PM IST

ஓபிஎஸ்-ஐ விமர்சித்து பேசிய திண்டுக்கல் சீனிவாசன்

தேனி: போடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமராஜ் இல்ல திருமண விழாவில் பங்கேற்க, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நாளை (ஜன.23) தேனி வர உள்ளதால், அவரை வரவேற்பதற்காகத் தேனி அன்னஞ்சி விளக்கில் 5000 தொண்டர்களைக் கூட்டி வரவேற்பு நிகழ்ச்சி நடத்தி திருமணத்திற்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த ஏற்பாடுகளைப் பார்வையிடுவதற்காக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், அமைச்சர் உதயகுமார், அமைச்சர் கே,சி.கருப்பண்ணன் ஆகியோர் அவ்விடத்திற்குச் சென்றனர். பின்னர் அங்குச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “முன்பு திண்டுக்கல் நாடளுமன்ற இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் எவ்வாறு போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றதோ, அது போல ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அமோக வெற்றி பெரும்.

ஒரு கட்சி என்றால் தேர்தலில் போட்டியிட வேண்டும். ஆனால் தேர்தலில் விட்டுக் கொடுப்போம் என ஓபிஎஸ் கூறுவது விந்தையாக உள்ளது. அதிமுக இரு அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை என்பது பொய்யான தகவல். தமிழகத்தில் அது போலப் பேச்சுவார்த்தை நடக்கவே இல்லை. ஒருவேளை கேரளாவில் உள்ள கட்சியில் நடக்கலாம்.எங்களோடு ஓபிஎஸ்-ஐ ஒப்பிடுவதே அவமானமாக கருதுகிறோம். ஓபிஎஸ் ஒரு சுண்டெலி, ஈபிஎஸ் ஒரு யானை. யானையுடன் சுண்டெலியை ஒப்பிடுவது அவமானம்” என ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சனம் செய்தார்.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஓபிஎஸ்-க்கு சவால் விடுத்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.