ETV Bharat / state

வொர்க் ஃபிரம் பார்ம் - ஐடி ஊழியர்களின் புது ஐடியா!

author img

By

Published : Mar 17, 2020, 9:50 PM IST

Updated : Mar 17, 2020, 11:49 PM IST

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் உள்ள ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களிடம் "வொர்க் ஃபிரம் ஹோம்" என்று சொல்லி வீட்டிலேயே வேலை பார்க்குமாறு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் புது விதமாக "வொர்க் ஃபிரம் பார்ம்" என அறிவித்து தனது நிறுவனத்தை இயற்கை சூழ்ந்த இடத்தில் இடம் மாற்றிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது குறித்த சிறப்பு தொகுப்பு.

தேனியில் அசத்தும் ஐடி வாலிபர்
தேனியில் அசத்தும் ஐடி வாலிபர்

தேனி மாவட்டம், அனுமந்தன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் (30). இவர், பெங்களுரில் உள்ள ஐடி நிறுவனத்தில் சிஇஓ -வாக பணியாற்றி வருகிறார். இவரது தலைமையில் சுமார் 20 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், உலகம் முழுவதும் கரோனா தொற்று தீவிரமடைந்ததையடுத்து, சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் உள்ள ஐடி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

அது மட்டுமல்லாமல் ஐடி ஊழியர்களை, "வொர்க் ஃபிரம் ஹோம்" என்று சொல்லி வீட்டிலேயே இருந்து வேலை பார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், அரவிந்த் தனது நிறுவனத்திலிருந்து, எட்டு பேரை தனது சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளார். மேலும் இவர்கள் அனைவரும் அரவிந்த்க்குச் சொந்தமான தென்னந்தோப்பு ஒன்றில் செம்மண் தரையில் போர்வையை விரித்து தங்களது அலுவலகத்தை உருவாக்கி அமர்ந்திருக்கிறார்கள்.

ஹை-டெக் அலுவலகம் டூ தென்னந்தோப்பு - தேனியில் அசத்தும் ஐடி ஊழியர்கள்

அவசர அவசரமாக அலுவலகம் புறப்பட்டு குளுகுளு ஏசியறையில் உள்ள தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்து கீபோர்டுக்கும் கம்ப்யூட்டருக்கும் மட்டுமே தனது கவனத்தை கடன் கொடுத்து உணவு இடைவெளியில் பீட்சா, பர்கர் என துரித உணவுகளை முழுங்கும் அவர்களுக்கு இந்தச் சூழல் வித்தியாசமான அனுபவம் தான்.

மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரம், மேனியைத் தழுவிச் செல்லும் வாடை காற்று, திரும்பும் திசையெங்கும் இயற்கை எழுப்பும் இசை, மிச்சம் வைக்க மனம் வராத கிராமத்து உணவு என்று, இந்தச் சூழலே இறுதி வரைக்கும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இறுதி வரை இங்கேயே அலுவலகத்தை மாற்றி விட ஆசை...

இவர்களின் குழுவில் இலங்கை, பிலிப்பைன்ஸ், டெல்லி, கொல்கத்தா, ஆந்திரா போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களும் இருக்கின்றனர். ஏழு மணி நேரம் வேலை, 8 மணி நேரம் தூக்கம், 9 மணி நேரம் இயற்கையை ரசித்து ஊர் சுற்றுவது என்று நேரத்தை ஒதுக்கி, தங்களுடைய பணியை செய்து வருகின்றனர்.

இதுமட்டுமல்லாமல் மரம் நட விருப்பமிருப்பவர்கள் இவர்களின் நிறுவனம் அறிமுகப்படுத்திய இன்ஸ்டா கிளீன் செயலியை டவுன்லோடு செய்து விருப்பம் தெரிவித்தால், அதனை இவர்களே செய்து முடிப்பார்கள். கடந்த 5 நாட்களில் சுமார் 3000 பேர் மரம் நட விருப்பம் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு டூ தேனி... ஐடி அலுவலகமாய் மாறிய தென்னந்தோப்பு

இவர்களின் செயலியை குறித்து அரவிந்த் கூறுகையில், இன்ஸ்டா கிளீன் செயலி இந்தியாவின் முதல் எகோ-ஃப்ரண்ட்லி செயலியாகும். நாம் ஒரு ஈமெயில் அனுப்பும் போது, 5 கிராம் அளவிலான (co2) கார்பன்-டை-ஆக்சைடு வெளிவருகிறது. ஒரு மனிதன் தனது வாழ்நாளில் 18 டன் அளவிலான கார்பன்-டை ஆக்சைடு வெளியிடுகிறான்.

இப்படி வெளியிடப்படும் co2 வாயுவால் புவி வெப்பமயமாதல் அதிகமாகிறது. இதைத் தடுக்கும் பொருட்டு, தேவையற்ற ஈமெயில்களை உங்களது மெயில் ஐடிக்கு வரவிடாமல் தடுப்பதே இந்த செயலியின் நோக்கம்" என்றார்.

இவர்கள் நிறுவனத்தில், மொத்தம் 20 பேர் வேலை பார்த்து வந்த நிலையில், எட்டு பேர் மட்டுமே தற்போது இங்கே வந்துள்ளனர். மீதமுள்ளவர்கள் விரைவில் வருவார்கள் என்றும் அரவிந்த் நம்பிக்கை தெரிவித்தார். இவர்களுடைய இந்த "வொர்க் ஃபிரம் பார்ம்" திட்டம் அனைவரின் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க : கானக உயிர்களைக் காண ஒரு பயணம்.... வன உயிர் புகைப்படக்காரர் செந்தில் குமரன் ஷேரிங்ஸ்

Last Updated : Mar 17, 2020, 11:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.