ETV Bharat / state

அடுக்கம் - கொடைக்கானல் சாலையில் மண்சரிவு: சாலையை சீர்படுத்தும் பணிகள் தீவிரம்!

author img

By

Published : Nov 3, 2019, 7:01 PM IST

தேனி: கனமழையால் அடுக்கம் - கொடைக்கானல் சாலையில் ஏற்பட்ட  மண்சரிவை அகற்றி போக்குவரத்தைச் சீர்படுத்தும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

adukam to kodai hills road damage

வடகிழக்குப் பருவமழை தொடங்கியது முதலே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த கனமழையின் காரணமாக தேனி மாவட்டம் பெரியகுளத்திலிருந்து அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்லும் சாலையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

மண்சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள் உருண்டு சாலையில் கிடப்பதால் அடுக்கம், சாமக்காடு, பாலமலை, பெருமாள் மலை உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால் பாறைகளை அகற்றி போக்குவரத்தைச் சீர்படுத்தும் பணியில் தொய்வு இருந்து வந்தது.

தற்போது மழையின் அளவு குறைந்துள்ளதால் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ராட்சதப் பாறைகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். இரண்டு ஜெசிபி இயந்திரம், கிட்டாச்சி இயந்திரம் மூலம் மண் மேடுகள் மற்றும் பாறைகளை அகற்றும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

சாலையில் உருண்டுவிழுந்த பாறைகள் அகற்றும் பணி

மேலும், ஐந்து இடங்களில் ஜெசிபி இயந்திரம் மூலம் அகற்ற முடியாத பாறைகளை, கம்ப்ரசர் இயந்திரம் மூலம் துளையிட்டு வெடி வைத்துத் தகர்த்து அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது சாலையில் இருசக்கர வாகனம் செல்லும் அளவிற்குச் சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: தலையாறு அருவியைக் காண குவியும் சுற்றுலாப் பயணிகள்!

Intro:         கனமழையால் அடுக்கம் - கொடைக்கானல் மலைச்சாலையில் மண் சரிவு, 10க்கும் மேற்பட்ட இடங்களில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து துண்டிப்பு. மீட்புப் பணிகள் தீவிரம்.
Body: வடகிழக்கு பருவமழை துவங்கியது முதலே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து அடுக்கம் வழியாக கொடக்கானல் செல்லும் மலைச்சாலையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு, இராட்சத பாறைகள் மற்றும் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அடுக்கம், சாமக்காடு, பாலமலை, பெருமாள்மலை உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட மலை கிராமங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மலை பெய்ததால் சாலைகளில் விழுந்த பாறைகள் மற்றும் மண் மேடுகளை அகற்ற முடியாத நிலையில் தற்போது படிப்படியாக மழையின் அளவு குறைந்தது.
இந்நிலையில், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ராட்சத பாறைகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இரண்டு ஜெசிபி இயந்திரம், கிட்டாசி இயந்திரம் மூலம் சாலைகளில் சரிந்து இருந்த மண் மேடுகள் மற்றும் பாறைகளை அகற்றும் பணி நடந்து வருகின்றது. மேலும் 5இடங்களில் இராட்சத பாறைகள் சரிந்து சாலையில் கிடப்பதால் அவற்றை ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்ற முடியாத நிலை உள்ளதால், மாற்றாக கம்பரசர் இயந்திரம் துலையிட்டு வெடி வைத்து தகர்த்து அப்புரப்படுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளன.

Conclusion: மேலும் சாலைகளில் உள்ள ராட்சத பாறைகளை அகற்றும் வரையில் கார் உள்ளிட்ட எந்த வாகனங்களும் செல்ல முடியாத நிலையில் தற்பொழுது இரு சக்கர வாகனங்கள் மட்டும் செல்லும் அளவிற்கு சாலைகளி சீரமைக்கப்பட்டுள்ளது. விரைந்து சாலையை சீரமைத்து வாகனங்கள் போக்குவரத்திற்கு சீர் செய்ய வேண்டும் என மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.