ETV Bharat / state

தொண்டர்கள், நிர்வாகிகள் கட்சிக்கே விஸ்வாசமாக இருக்க வேண்டும் - ஓபிஎஸ் - o panneerselvam

தேனி: எனக்கோ மற்ற உயர்மட்ட பொறுப்பில் இருப்பவர்களுக்கு விஸ்வாசமாக இருப்பதை விட, கட்சிக்கு அனைவரும் விஸ்வாசமாக இருக்க வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் ஓபிஎஸ் பேசியுள்ளார்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்
author img

By

Published : Aug 23, 2020, 4:19 PM IST

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மாவட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டம் இன்று (ஆக. 23) நடைபெற்றது. இதில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

அப்போது பேசிய அவர், ” உயர்மட்டத்தில் உள்ள பொறுப்பாளர்களான எனக்கோ, மற்ற யாருக்கோ நீங்கள் விஸ்வாசமாக இருக்க வேண்டியதை விடுத்து, அனைவரும் கட்சிக்கு விஸ்வாசம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். அப்படி இருப்பவர்கள் மட்டுமே பொறுப்பாளராக அமரவைக்க வேண்டும்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியது போல் இந்த இயக்கம் தொடர்ந்து பல நூறு ஆண்டுகள் இருக்க வேண்டும் எனில், கட்சி பொறுப்பில் உள்ள அனைவரின் எண்ணமும் தூய்மையாக இருக்க வேண்டும். நமது அடுத்த இலக்கு 2021இல் அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமரவைக்க வேண்டும் என்பதே, ஒரே இலக்காக கொண்டு களப்பணி ஆற்றிட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

அதிமுக தொண்டர்கள் கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ்

இந்த கூட்டத்தில் அதிமுக மாவட்ட, ஒன்றியம், பேரூர் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:அதிமுகவில் அடிமட்ட தொண்டனும் முதலமைச்சராக முடியும். திமுகவில் முடியுமா? : செல்லூர் ராஜூ கேள்வி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.