தேனி மாவட்டம் தேவாரத்தில் தனது கட்சி பிரமுகரின் திருமண விழாவில் கலந்துகொண்ட நடிகர் சரத்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”ரஜினியை பற்றி கேள்வி கேட்டு உங்களுடைய டிஆர்பியை உயர்த்தும் எண்ணத்துடன் கேள்வி உள்ளது. இதற்கு பதில் சொல்ல வேண்டுமென்றால் ஐந்து லட்ச ரூபாயை என் வங்கி கணக்கில் போட்ட பிறகு பதிலளிக்கிறேன்.
என்பிஆர் கணக்கெடுப்பை அமல்படுத்த இன்னும் இரண்டு மாத காலங்கள் ஆகும். மத்திய அரசின் முடிவுக்கு பிறகு அதுகுறித்து தமிழ்நாடு அரசு நல்ல முடிவு எடுக்கும். குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் கிடையாது. குடியுரிமை திருத்தச் சட்டத்தில் உள்ள சாராம்சங்களை முதலில் படித்து தெரிந்துகொண்டு பிறகு இஸ்லாமியர்கள் போராட்டத்தில் இறங்க வேண்டும்.
இஸ்லாமியர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என மத்திய அரசு கூறவில்லை. கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் குறைந்த அளவில்தான் உள்ளது. எனவே, தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் தங்கள் உடலை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். நமது முன்னோர்களின் பாரம்பரிய நடைமுறையை கடைபிடிக்க வேண்டும். தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால், பொதுமக்களுடைய நலனில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள்” என்றார்.
இதையும் படிங்க: 10 மாத பெண் குழந்தையை, கிணற்றில் வீசி கொலை செய்த தந்தை!