ETV Bharat / state

Actor Marimuthu : நடிகர் மாரிமுத்துவுக்கு இறுதி அஞ்சலி.. ஆதி குணசேகரனை காண திரண்ட மக்கள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2023, 11:13 AM IST

Actor marimuthu Funeral: சென்னையில் மாரடைப்பால் உயிரிழந்த இயக்குநரும் நடிகருமான மாரிமுத்துவின் உடல் சொந்த ஊரான ஆண்டிப்பட்டி அருகே உள்ள பசுமலைதேரி மலை கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. 11 மணிக்கு மேல் உடல் தகனம் செய்யப்பட உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.

மாரிமுத்துவின் உடலுக்கு இன்று இறுதி சடங்கு

தேனி: சென்னையில் மாரடைப்பால் உயிரிழந்த பிரபல நடிகரும் இயக்குநருமான மாரிமுத்துவின் உடல் நேற்று (செப். 8) சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கபட்ட நிலையில் பல்வேறு திரையுலக பிரபலங்களும், அரசியல் கட்சி பிரமுகர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

இறுதி சடங்கு: இந்நிலையில் அவரது உடல் சொந்த ஊரான தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பசுமலைதேரி கிராமத்திற்கு நேற்று (செப். 8) மாலை 6 மணியளவில் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரபட்டு 12 மணி நேர பயணத்திற்கு பிறகு இன்று (செப். 9) அதிகாலை 5.50 மணியளவில் அவரது சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது.

மாரிமுத்துவின் உடல் பசுமலைதேரி கிராமத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பாக குடும்பத்தார்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் அஞ்சலிக்காக வைக்கபட்டது. குடும்பத்தினரும், உறவினர்களும் நடிகர் மாரிமுத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் காலை 11 மணிக்கு மேல் மாரிமுத்துவின் உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட உள்ளதாக அவரது மகன் அகிலன் தெரிவித்து உள்ளார்.

சினிமா நாட்டம்: மயிலாடும்பாறை பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் படித்த மாரிமுத்து பின்னர் சிவகாசியில் உள்ள பலவகை தொழில்நுட்ப கல்லூரியில் பயின்றார். படித்து கொண்டிருக்கும் போதே சினிமாவில் நாட்டம் கொண்ட மாரிமுத்து, இரவில் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது கரிக்கட்டையால் சுவற்றில் நான் சினிமாத் துறைக்கு செல்லவேண்டும் என எழுதி வைத்துவிட்டு சென்னைக்கு சென்று உள்ளார்.

சென்னையில் அரம்ப காலத்தில் தனியாக சிரமப்பட்டு, வாய்பு தேடி பல இடங்களில் அலைந்து கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்பு பெற்று இன்று சிறந்த நடிகராக வலம் வந்தார். இயக்குநராகவும், பல படங்களுக்கு உதவி இயக்குநராகவும் பணிபுரிந்து தற்பொழுது சன் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் நாடகத் தொடரில் முக்கியமாக கதாபாத்திரமாக நடித்து வந்தார்.

மாரிமுத்து, ஆதிகுனசேகரன் என்னும் கதாபாத்திர பெயரால் அனைவரிடத்திலும் பிரபலமடைந்தார். எதார்த்தமான நடிப்பால் பலரது மனங்களை கவர்ந்த இவருக்கு, தனி ரசிகர்கள் கூட்டமே சேர்ந்தது. இவர் பேசும் வசனங்களும், இவரது பாவனைகளும் சமூக தளங்களில் மீம்ஸ்களாக வலம் வந்தன.

தற்போது தேனிக்கு அவரது உடல் கொண்டுவரப்பட்ட நிலையில், அவரது சடலத்தை காண ஊர்மக்கள், ரசிகர்கள் என அனைவரும் திரண்டு உள்ளனர். உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ரசிகர்கள் திரண்டு வந்த வண்ணம் உள்ளனர். திருநெல்வேலியில் இருந்து ரசிகைகளான மாற்றுத்திறனாளி சகோதிரிகள் தேனியில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலை காண வந்தனர்.

இதையும் படிங்க: ஜேடர்பாளையம் கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் 10 கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.