ETV Bharat / state

கேரளாவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஊருக்குள் சுற்றித்திரியும் புலி; வைரல் வீடியோ - kerala

கேரளாவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக மீண்டும் காட்டை விட்டு ஊருக்குள் புலி நுழையும் காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

ஊருக்குள் நுழைந்த புலியின் வைரல் வீடியோ
ஊருக்குள் நுழைந்த புலியின் வைரல் வீடியோ
author img

By

Published : Oct 4, 2022, 7:14 PM IST

கேரளா மாநிலம், மூணாறு அருகே உள்ள ராஜமலைப்பகுதியில் மாட்டுத்தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த 10 மாடுகளை புலி ஒன்று இரண்டு நாட்களாகத் தொடர்ந்து தாக்கிக் கொன்றது. இதனால் இந்தப் பகுதி மக்கள் மிகுந்த அச்சத்திலும் பீதியிலும் உறைந்து போன நிலையில் புலியைப் பிடிக்க வனத்துறையினர் சிறப்பு குழுக்களை அமைத்து புலியைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

புலி வெறி பிடித்து திரிவதால் அதனை மயக்க ஊசி அடங்கிய துப்பாக்கி மூலமாக சுட்டுப்பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு புலியினைத்தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களாக புலியின் அட்டகாசத்தால் அச்சத்தில் இருந்த மக்களுக்கு, மேலும் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக மீண்டும் காட்டைவிட்டு புலி, ராஜமலைப்பகுதியில் உள்ள மாட்டுத்தொழுவத்தை நோக்கி வரும் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

ஊருக்குள் நுழைந்த புலியின் வைரல் வீடியோ

ஜீப் ஓட்டுநர்கள் ராஜமலை பகுதியை நோக்கிச்செல்லும்போது, அங்கு இருந்த புலி ஜீப் ஓட்டுநர்களை கண்டதும் மீண்டும் காட்டுக்குள் செல்லும் காட்சிகள் அதில் தெளிவாகப் பதிவாகி உள்ளன. இந்த காட்சிகளின் அடிப்படையில் புலியின் இருப்பிடத்தைத் தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், ராஜமலை கிராமப்பகுதியைச்சுற்றியுள்ள இடங்களில் பல்வேறு இடங்களில் கூண்டுகள் அமைத்து புலியை பிடிப்பதற்கான ஏற்பாடுகளையும் வனத்துறையினர் முழு வீச்சில் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: காட்டெருமை கன்றினை கண்காணிக்கும் வனத்துறையினர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.