ETV Bharat / state

அதிமுகவில் தனி குடும்பம் ஆதிக்கம் செலுத்த முடியாது - சசிகலா குறித்து ஓபிஎஸ் - சசிகலா

சசிகலா கட்சியை மீட்போம் என தொண்டர்களிடம் தொலைபேசி வாயிலாக பேசி வருகிறாரே என்ற கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், அதிமுகவை பொறுத்தவரை தனி ஒரு குடும்பம் அதில் ஆதிக்கம் செலுத்த முடியாது. யாராளும் அதிமுகவை கைப்பற்ற முடியாது என தெரிவித்தார்.

A single family cannot dominate ADMK - OPS

author img

By

Published : Jul 28, 2021, 4:50 PM IST

தேனி: அதிமுகவில் தனி ஒரு குடும்பம் ஆதிக்கம் செலுத்த முடியாது. கட்சியை யாரும் கைப்பற்ற முடியாது. ஆறுமுக சாமி விசாரணை ஆணையத்திற்கு அடுத்தமுறை நானே நேரடியாக ஆஜராவேன் என ஓபிஎஸ் தெரி

அதிமுக சார்பாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரோனா தொற்று காரணமாக அதிமுகவினர் தங்களின் வார்டுகளில் ஆர்ப்பாட்டம் நடத்துமாறு அக்கட்சி தலைமை அறிவித்தது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவரது சொந்த தொகுதியான போடிநாயக்கனூரில் உள்ள அவரது அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதில் போடி நகர், பேரூர் அதிமுக உறுப்பினர்கள் 40க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு திமுக அரசிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் கூறுகையில், அதிமுக ஆட்சியில் பொதுமக்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் தடை இல்லாத மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. சிறுபான்மையினர் மக்களுக்கு எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லாமல் இருந்தது.

திமுக தேர்தலில் 505 வாக்குறுதிகளை அளித்தது. ஆட்சி பொறுப்பேற்ற மூன்று மாதத்தில் மக்களின் முக்கிய பிரச்னைகளில் இருந்து பின் வாங்குகிறது. நீட் தேர்வு, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, பெண்களுக்கு 1,000 ரூபாய் நிவாரண தொகை என எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.

கரோனாவை கட்டுப்படுத்துவதில் அதிமுக சிறப்பாக செயல்பட்டது என பிரதமரால் பாராட்டுப் பெற்றது. ஆனால், தற்போது கரோனா மரணங்கள் மறைக்கப்படுகின்றன. மேகதாது அணை பிரச்னை, காவிரி நீரை மறித்து அணை கட்டக்கூடாது என்ற நிலை உள்ளது. தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல் அணை கட்ட முடியாது. ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் இருவரும் சேர்ந்து கட்சியை வழிநடத்திக் கொண்டு இருக்கிறோம் என்றார்.

அதிமுகவில் தனி குடும்பம் ஆதிக்கம் செலுத்த முடியாது

சசிகலா கட்சியை மீட்போம் என தொண்டர்களிடம் தொலைபேசி வாயிலாக பேசி வருகிறாரே என்ற கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், அதிமுகவை பொறுத்தவரை தனி ஒரு குடும்பம் அதில் ஆதிக்கம் செலுத்த முடியாது. யாராளும் அதிமுகவை கைப்பற்ற முடியாது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஓபிஎஸ், தேனி மாவட்டத்தில் முல்லை பெரியாறு பாசன விவசாயிகளின் மின்சாரத்தை துண்டித்து வருகின்றனர். இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் அதிமுக சார்பாக போராட்டம் நடத்தப்படும் என்றார்.

தேர்தலில் எம்ஜிஆர், ஜெயலலிதாவை முன்னிறுத்தவில்லை என முன்னாள் எம்.பி அன்வர் ராஜா பேசியது குறித்த கேள்விக்கு, அன்வர் ராஜா பேசியது தவறு. தேர்தலின் போது இணை ஒருங்கிணைப்பாளரும் நானும் எம்ஜிஆர் ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களை முன்னிறுத்தி தான் பிரச்சாரம் மேற்கொண்டோம்.

தங்க தமிழ்ச்செல்வன் செயல்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தகரச் செல்வன் குறித்து அனைவரும் அறிந்ததே என கிண்டலுடன் பேசத் தொடங்கினார். அப்போதைய காலகட்டத்தில் ஜெயலலிதா போட்டியிடுவதற்காக நான் ராஜினாமா செய்ய தயாராக இருந்தேன். ஆனால் தங்க தமிழ்ச்செல்வன் ராஜினாமா செயவதற்கு முதலில் மறுத்தார். எம்.எல்.ஏ - எம்.பி, மாவட்ட செயலாளர் என முக்கிய பதவி வகித்த அவர், தற்போது கட்சி மாறி விமர்சித்து வருகிறார் என்றார்.

மேலும் ஆறுமுகசாமி விசாரணைக்கு ஆஜராகாதது குறித்த கேள்விக்கு, ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் பணி காரணமாக இரண்டு முறை ஆஜராக முடியவில்லை. இரண்டு முறை ஆணையம் சார்பாக விசாரணை நடத்த முடியாத சூழ்நிலை; விசாரணை ஆணையம் தொடங்கிய பின்பு முதல் ஆளாக நானே செல்வேன் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: வன்னியருக்கான இடஒதுக்கீட்டுக்குத் தடை விதிக்க முடியாது - உயர் நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.