தேனி: பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட கெங்குவார்பட்டி பகுதியில் நேற்று மாலை சாலையில் நடந்து சென்ற 16 வயது சிறுமியிடம் முத்துச்சாமி (வயது 49) என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகச் சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் தேவதானப்பட்டி காவல்துறையினர் முத்துச்சாமியைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு பின்பு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பெரியகுளம் நீதிமன்றத்தில் நிறுத்தி நீதிபதி உத்தரவு பேரில் சிறையில் அடைத்துள்ளனர்.
இதையும் படிங்க:மனைவி குடும்பத்தை உயிருடன் கொளுத்திய கணவர்