தேனி மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் சினேகன் நீச்சலில் பல சாதனைகளை படைத்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு பாக் ஜலசந்தியை கடந்து சாதனை புரிந்தார். இந்த நிலையில், அயர்லாந்து நாட்டில் உள்ள வடக்கு கால்வாய் முதல் ஸ்காட்லாந்து வரையில் 35 கி.மீ. தூரத்தை 14 மணி நேரம் 39 நிமிடத்தில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்த சாதனை முயற்சிக்காக அவர் தனது நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமாருடன் இணைந்து இங்கிலாந்தில் உள்ள டொனகடே துறைமுகத்தில் தங்கி சில வாரங்கள் பயிற்சியினை மேற்கொண்டார். இந்த பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவு செய்த நிலையில், அவர் வடக்கு கால்வாயில் இருந்து நீச்சல் அடித்து தனது இலக்கினை எட்டினார்.
14 வயதிற்கு உட்பட்ட சிறுவர் பிரிவில் இந்த கால்வாயினை கடந்த 4ஆவது சிறுவன் சினேகன் என்பது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: கடலுக்கடியில் வரவுள்ள 'புல்லட் ரயில்' சேவை ; இந்தியாவில் முதல்முறை