ETV Bharat / state

ஓபிஎஸின் 70ஆவது பிறந்த நாள் விழா - கே.பி.முனுசாமி உள்பட அதிமுகவினர் நேரில் சென்று வாழ்த்து - பன்னீர் செல்வத்துக்கு அதிமுகவினர் வாழ்த்து

தேனி: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் 70ஆவது பிறந்த நாளையொட்டி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அக்கட்சியின் வழிகாட்டுதல் குழு உறுப்பினர் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஓபிஎஸின் 70ஆவது பிறந்த நாள்
ஓபிஎஸின் 70ஆவது பிறந்த நாள்
author img

By

Published : Jan 14, 2021, 4:01 PM IST

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம் தனது 70ஆவது பிறந்த தினத்தை இன்று (ஜனவரி 14) கொண்டாடுகிறார். இதையொட்டி, அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி, தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத் தெருவில் உள்ள ஓ. பன்னீர் செல்வத்தின் வீட்டின் முன்பு இன்று காலை முதலே அதிமுகவினர் ஏராளமானோர் குவியத் தொடங்கினர்.

இதனிடையே, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, அக்கட்சியின் வழிகாட்டுதல் குழு உறுப்பினர் மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தங்களது ஆதரவாளர்களுடன் நேரில் சென்று பன்னீர் செல்வத்துக்கு வாழ்த்து தெரிவித்தனர். எம்ஜிஆர் இளைஞர் அணியின் வடசென்னை வடமேற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஆறு அடி நீள வெள்ளி வாள் மற்றும் ஆளுயுர ரோஜா மாலையுடன் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

ஓபிஎஸின் 70ஆவது பிறந்த நாள்

இதையடுத்து தமிழர் திருநாளாம் தை பொங்கலை முன்னிட்டு ஓ. பன்னீர்செல்வம் தனது குடும்பத்துடன் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார். இதில் ஓபிஎஸின் மனைவி விஜயலட்சுமி, தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.