தேனி ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் கிருஷ்ணா நகர் உள்ளது. இங்குள்ள தனியார் மழலையர் பள்ளிக்கு எதிரே உள்ள வீட்டில் விமல்குமார் (33). இவரது மனைவி இலக்கியா (30) மகள் ராகமித்ரா ஆகியோருடன் வசித்துவருகின்றார். ஜூன் 1இல் கம்பத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றவர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) வீடு திரும்பியபோது கிரில் கேட் கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியுற்றனர்.
உள்ளே இருந்த பீரோவை உடைத்த அடையாளம் தெரியாத நபர்கள் 40 பவுன் தங்க நகை, ஒரு லட்சம் ரொக்கம் வெள்ளிப்பொருட்கள் திருடப்பட்டது தெரியவந்தது. இது சம்பந்தமாக காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துணை கண்காணிப்பாளர் முத்துராஜ் தலைமையிலான காவல் துறையினர், தடயவியல் நிபுணர்களுடன் ஆய்வு செய்து தடய ஆவணங்களைச் சேகரித்துள்ளனர்.