தேனி: பொம்மைகவுண்டன்பட்டியில் சங்கர் சிலம்பம் தற்காப்பு மற்றும் ஆயுதக் கலை பயிற்சி மையம் சார்பில் தொடர்ந்து மூன்று மணி நேரம் சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்கான உலக சாதனை முயற்சி நடைபெற்றது. இந்த சாதனை முயற்சியில் சுமார் 50 சிலம்பம் வீரர்கள் கலந்துக் கொண்டு உலக சாதனை முயற்சியை நிகழ்த்தினார்.
4 வயது முதல் உள்ள சிறுவர், சிறுமிகள் இந்த உலக சாதனை முயற்சியில் கலந்து கொண்டு தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கு மேலாக சிலம்பம் சுற்றி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். உலக சாதனை முயற்சிக்காக காலை 11 மணி அளவில் தொடங்கி மாலை 3 மணி வரை தொடர்ந்து சிலம்பம் சுற்றி நோபல் புக் ஆப் ரெகார்ட்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தனர்.
தொடர்ந்து சிலம்பம் சுற்றிய சிலம்பம் வீரர்களுக்கு நோபல் புக் ஆப் உலக சாதனை அங்கீகரிக்கப்பட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க:புத்தாண்டே வருக! புது வாழ்வைத் தருக! - முதல்வரின் புத்தாண்டு வாழ்த்து