ETV Bharat / state

கேரளாவிற்கு எம் சாண்ட் மணல் கடத்திய இரண்டு லாரிகள் பறிமுதல் - மணல் கடத்தல்

தேனி: தமிழ்நாட்டிலிருந்து கேரளாவிற்கு எம் சாண்ட் மணல் கடத்திய இரண்டு லாரிகளை தமிழ்நாடு கேரளா எல்லையில் வைத்து கனிமவளத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

எம் சாண்ட் மணல் கடத்திய லாரிகள்  தேனி மாவட்டச் செய்திகள்  மணல் கடத்தல்  m sand theft
கேரளாவிற்கு எம் சாண்ட் மணல் கடத்திய இரண்டு லாரிகள் பறிமுதல்
author img

By

Published : Mar 12, 2020, 8:12 AM IST

தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட எம் சாண்ட் மணல் லாரிகளில் கடத்தப்படுவதாக தேனி மாவட்ட உத்தமபாளைய வருவாய்த்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து உத்தமபாளையம் வட்டாட்சியர் உதயராணி தலைமையில் குமுளி மாலைச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த இரண்டு டிப்பர் லாரிகளை சோதனையிட்ட போது, அதில் அனுமதி மறுக்கப்பட் எம் சாண்ட் மணலையும் ஜல்லியையும் ஏற்றி கடத்திச் செல்லவிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து இரு லாரிகளையும் பறிமுதல் செய்த வருவாய்த்துறை அலுவலர்கள், பாதுகாப்பு கருதி லாரிகளை லோயர்கேம்ப் காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு லாரிகள்

இதுகுறித்து லோயர் கேம்ப் காவலர்கள் தெரிவிக்கையில், "லாரிகளை கனிமவளத்துறையினர் பிடித்துக் காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். மற்றபடி எந்த விவரமும் தெரியாது" என்றனர்.

கனிமவளத்துறையினர் பேசுகையில், கேரளாவிற்கு ஜல்லி கொண்டு செல்ல அனுமதி உண்டு. ஆனால் எம் சாண்ட் மணல் கொண்டு செல்ல அனுமதி கிடையாது. இருந்தபோதிலும் கனிமவளத்துறையினர் அனுமதிச் சீட்டு இல்லாமல் ஜல்லி கொண்டு செல்கின்றனர்.

இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. சோதனையில் இரண்டு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதற்கு அபராதம் விதிக்கப்படும்" என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஒரு கையில் 'செல்போன்'... ஒரு கையில் 'ஸ்டீயரிங்' - 15 கி.மீ. அசால்டாக பஸ்ஸை ஓட்டிய ஓட்டுநர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.