தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (35). லாரி ஓட்டுநரான இவர், அப்பகுதியில் வசித்துவரும் 14 வயதுடைய 10ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை கடந்த டிசம்பர் 5ஆம் தேதி ஆசைவார்த்தைகள் கூறி கடத்திச் சென்றதாக ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதனடிப்படையில் விசாரணை நடத்திய காவல் துறையினர், திருப்பூரில் சிறுமியுடன் தங்கியிருந்த மகாலிங்கத்தைச் சுற்றி வளைத்தனர். இதையடுத்து ஆசைவார்த்தைகள் கூறி சிறுமியை ஏமாற்றி பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்ததையடுத்து மகாலிங்கம் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 80 லட்சம் மோசடி: ஊர் சுற்றிய உடன்பிறப்புகளுக்குச் சிறைவாசம்