தேனி: தேனி மாவட்டத்தில் குழந்தைகள் நலக்குழு, சைல்டு லைன், தொழிலாளர் நலன் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தோர் அடங்கிய குழுவினர் தேனி மாவட்டம் போடி பகுதியில் நேற்றைய (பிப்.1) தினம் நடத்திய ஆய்வில், அங்கு கொத்தடிமைகளாக இருந்த 5 சிறார்கள் மீட்கப்பட்டனர்.
இதையடுத்து சின்னமனூரில் உள்ள உணவகங்கள், ஜவுளிக்கடை, கனரக தொழிற்கூடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இன்று(பிப்.2) அக்குழுவினர் நடத்திய ஆய்வில், ஒரு சிறுமி உள்பட 7 சிறார்கள் கொத்தடிமைகளாக பணியமர்த்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. கொத்தடிமைகளாக இருந்த சிறுவர்களை, மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவர் சுரேஷ்குமார் தலைமையில், சென்று காவல்துறையினர் மீட்டனர்.
இரண்டு நாட்களில் மீட்கப்பட்ட 12 சிறுவர்களின் விருப்பத்தின் பேரில் அவர்கள் கல்வியைத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறிய மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவர் சுரேஷ்குமார், சிறார்களை பணியமர்த்திய உரிமையாளர்கள் மீது காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டு சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதையும் படிங்க: சசிகலாவுக்காக சில்லறைகளை சிதறவிட்டு போஸ்டர் ஒட்டிய அதிமுகவினர்