ETV Bharat / state

கஞ்சா போதையில் தந்தையை தாக்கிய மகன் கைது - கஞ்சா போதையில் தந்தையின் காலை வெட்டிய மகன் கைது

நீலகிரி: குன்னூர் அருகே கஞ்சா போதையில் தந்தையை கத்தியால் தாக்கிய மகனை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

கஞ்சா போதையில் தந்தையை வெட்டிய மகன் கைது

author img

By

Published : May 25, 2020, 1:08 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் போகி தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (51). இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் கூலி வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மதுபோதையில் இருந்த தந்தை ரவிச்சந்திரனுக்கும், கஞ்சா போதையில் இருந்த இரண்டாவது மகன் ராஜா ராமுக்கும்(23) இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து வாக்குவாதம் கைகலப்பாக மாறியதால், கத்தியால் தந்தையின் காலை ராஜா ராம் வெட்டினார். இதில், பலத்த காயமடைந்த ரவிச்சந்திரன் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

பின்னர் போதை தலைக்கேறியதால், அங்கிருந்த வாகனங்களை உடைத்துவிட்டு ராஜா ராம் மயங்கி கீழே விழுந்தார். இச்சம்பவம் வெலிங்டன் காவல் நிலையத்தின் அருகே நடைபெற்றது. தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த காவல் துறையினர், ரவிச்சந்திரனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போதையில் கிடந்த ராஜா ராமை காவல் நிலையத்திற்கு கொண்டுச் சென்றனர்.

போதையில் தந்தையை வெட்டிய மகன்

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், ராஜா ராமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: ஊரடங்கை ஊருக்காக பயன்படுத்திய தந்தை மகன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.