ETV Bharat / state

உலக மருந்தாளுநர் தினத்தை கொண்டாடிய கல்லூரி மாணவர்கள்! - உலக மருந்தாளுநர் தினம் கொண்டாடப்படும் தேதி

உதகை: உலக மருந்தாளுநர் தினம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.

World Pharamacist day celebration at ooty college
author img

By

Published : Sep 25, 2019, 4:42 PM IST

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 25ஆம் தேதி மருந்தாளுநர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது. மருத்துவத் துறையில் மிக முக்கிய பங்கு வகிக்கும் மருந்தாளுநர்களின் அறிவுரையின்படிதான் நோயாளிகள் மருந்து உட்கொள்ள வேண்டும். இந்த ஆண்டுக்கான மருந்தாளுநர் தினமானது உதகையில் உள்ள தனியார் பார்மசி கல்லூரியின் சார்பாக கொண்டாடப்பட்டது.

பேரணி சென்ற மாணவர்கள்

கொண்டாட்டத்தில் உதகையின் முக்கிய வீதியான கமர்சியல் சாலையில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் மருத்துவர் ஆலோசனைபடி மருந்து உட்கொள்ளுதல், மருந்து சீட்டு வைத்தே மருந்துகள் வாங்குதல் உள்ளிட்ட பதாகைகளை ஏந்தியவாறு விழிப்புணர்வு பேரணியில் ஈடுப்பட்டனர்.

மருந்தாளுநர்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்தப் பேரணி ஏ.டி.சி. பகுதியில் தொடங்கி எட்டின்ஸ் சாலை, சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, மணிகூண்டு சாலை வழியாக காந்தி விளையாட்டு மைதானம் வந்தடைந்தது. மைதானத்தில் ஒன்று கூடிய மாணவர்கள் பார்மசிஸ்ட் குறியீடான ஆர்.எக்ஸ்.(RX) என்ற வடிவில் மனித சங்கிலியாக நின்று உலக மருந்தாளுநர் தினத்தை கொண்டாடினர்.

இதையும் படிங்க: ஆஸ்துமாவை அஸ்தமனமாக்கும் மருத்துவம்! அசத்தும் ’ஹைதராபாத் இலவச மீன் மருத்துவம்’

Intro:OotyBody:

உதகை 25-09-19
உலக மருந்தாளுனர் தினம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உதகையில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களின் விழிப்புணர்வு பேரணி.

ஆண்டுதோறும் செப்டம்பர் 25-ந்தேதி மருந்தாளுனர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மருத்துவ துறையில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் இந்த மருந்தாளுனர்களின் அறிவுரையின் படி தான் நோயாளிகள் மருந்து உட்கொள்ள வேண்டும். இந்த ஆண்டிற்கான மருந்தாளுனர் தினமானது உதகையில் உள்ள ஒரு தனியார் பார்மசி கல்லூரியின் சார்பாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக உதகையின் முக்கிய வீதியான கமர்சியல் சாலையில் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் மருத்துவர் ஆலோசனை படி மருந்து உட்கொள்ளுதல், மருந்து சீட்டு வைத்தே மருந்;துகள் வாங்குதல் உள்ளிட்ட பதாகைகளை ஏந்தியவாறு விழிப்புணர்வு பேரணியில் ஈடுப்பட்டனர்.
மருந்தாளுனர்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைப்பெற்ற இந்த பேரணி ஏ.டி.சி பகுதியில் துவங்கி எட்டின்ஸ் சாலை, சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, மணிகூண்டு சாலை வழியாக காந்தி மைதானம் வந்தடைந்தனர். அதன் பின்னர் அங்குள்ள காந்தி விளையாட்டு மைதானத்தில் ஒன்று கூடிய அவர்கள் பார்மசிஸ்ட் குறியீடான ஆர்.எக்ஸ் என்ற வடிவில் மனித சங்கிலியாக நின்று உலக மருந்தாளுனர் தினத்தை கொண்டாடினர்.

Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.