நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே கடந்த இரண்டு தினங்களுக்கு முன் சிறுத்தை தாக்கி பெண் காயமடைந்தார். குன்னூர் வனத்துறையினர் சிறுத்தையைப் பிடிக்க தீவிர முயற்சி செய்தும் சிறுத்தை பிடிபடவில்லை.
ஆகவே, கிராமத்தின் அருகே இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என்பதை அறிந்துகொள்ள வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
இதற்காக வனத்துறையினர் தனிக்குழு அமைத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இரவுநேரங்களில் அப்பகுதியிலுள்ள பொதுமக்களை வெளியில் வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக, வனப்பகுதியில் தினந்தோறும் 12 கற்கும் மேற்பட்டோர் சிறுத்தையை புகைப்படங்கள் எடுப்பதாகக்கூறி, துன்புறுத்தி வருவதாக பொதுமக்கள் வனத்துறையினரிடம் புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து வனத்துறையினர் புகைப்படங்கள் எடுப்பதாகக்கூறி, எவரேனும் வனப்பகுதிக்குள் சென்றால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்; அவர்களது கேமராக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.