நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் ஆண்டுதோறும் பருவ மழைக்கு முன், பின் என இரண்டு முறை வன உயிரின கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்படும்.
அதன்படி இந்தாண்டு தென்மேற்கு பருவ மழைக்கு பிந்தைய வன உயிரின கணக்கெடுப்பு பணி இன்று காலை தொடங்கியது. இந்தப் பணிக்காக முதுமலை புலிகள் காப்பக உள் மண்டல வனப்பகுதியின் மொத்த பரப்பளவான 321 சதுர கிலோ மீட்டரை 37 நேர் கோடுகளாக பிரித்துள்ளனர். ஒரு நேர்க்கோட்டிற்கு மூன்று பேர் வீதம் மொத்தம் 110-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கணக்கெடுப்பு பணியானது வரும் நவம்பர் 10ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. வனவிலங்குகளின் கால் தடம், எச்சம், நேரடி பார்வை உள்ளிட்டவற்றை அடிப்படையாகக்கொண்டு கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. அதேபோல வனப்பகுதியில் உள்ள மரங்கள், தாவரங்களையும் கணக்கெடுக்கும் பணியும் நடக்கிறது. இந்தாண்டு கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின்றி வனத்துறையினர் மட்டுமே இப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க:உதகையில் வனவிலங்குகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்