நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகேவுள்ள கெத்தை வனப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முகாமிட்ட காட்டுயானைகளை குந்தா வனத்துறையினர் குன்னூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட முத்தநாடு பகுதிக்குள் விரட்டியடித்தனர். இந்நிலையில், காட்டு யானைகள் மீண்டும் குன்னூர் அருகேயுள்ள ஆர்செடின் கிராமத்திற்குள் முகாமிட்டுள்ளன. எனவே யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையாமல் தடுக்கும் வகையில், பட்டாசு வைத்து வெடித்து வனத்துறையினர் விரட்டி வருகின்றனர்.
தேயிலை தோட்டத்தில் பசுந்தேயிலையை பறிக்க தொழிலாளர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து யானைகளின் செயல்பாடுகளை வனத்துறையினர் கூர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: முதுகில் பலத்த காயத்துடன் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை!