நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உதகை, பந்தலூர், தேவாலா, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பந்தலூர் பகுதியில் 7 செ.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் பாடந்துறை அடுத்த ஒருமடம் பகுதிகளில் உள்ள நேந்திர வாழை பயிரிடப்பட்டுள்ள விவசாய தோட்டங்களை காட்டு யானைகள் முற்றிலும் சேதப்படுத்தி உள்ளன.
மழைக்காலம் என்பதால் இரவு நேரங்களில் காட்டுயானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட தேவையான நடவடிகை எடுக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சென்னை அண்ணா சாலை கட்டடத்தில் தீ விபத்து