ETV Bharat / state

அதிக விலைக்கு ஏலம் போன 'வொயிட் டீ '

உதகை: குன்னூர் அருகே உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையில் உற்பத்தியான தேயிலை ஒரு கிலோ ரூ.16 ஆயிரத்து 400க்கு ஏலம் போனது.

r
r
author img

By

Published : Jun 21, 2021, 10:35 PM IST

நீலகிரி மாவட்டத்தில் 60 ஆயிரத்தும் மேற்பட்ட தேயிலை விவசாயிகள் உள்ளனர். இவர்கள் மாவட்டத்தில் உள்ள 120 தனியார் தேயிலை தொழிற்சாலைக்கு பசுந்தேயிலையை வழங்கி வருகின்றனர். தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை தூள், குன்னூரில் உள்ள ஏல மையத்தில் ஏலம் விடப்பட்டு சர்வதேச அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சர்வதேச தேயிலை ஏலம் இன்று (ஜூன் 21) ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது. இதையடுத்து, குன்னூரில் உள்ள சி.டி.டி.ஏ.சி ஏல மையத்தில் பல்வேறு தொழிற்சாலைகளின் சிறப்பு தேயிலை தூள்கள் ஏலத்திற்கு வந்தன. இதில் குன்னூர் பில்லிகம்பை எஸ்டேட்டில் உள்ள அவெட்டா நிறுவனத்தின் 'சில்வர் டிப்ஸ்' எனப்படும் 'வொயிட் டீ 'ஏலத்திற்கு வந்தது.

அதிக விலைக்கு ஏலம் போன வொயீட் டீ

இந்த சிறப்பு தேயிலை தூள் அதிகபட்சமாக 16 ஆயிரத்து 400 ரூபாய்க்கு ஏலம் போனது. இதற்கு தென்னிந்திய அளவில் அதிகபட்சமாக விலை கிடைத்துள்ளது. சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் 5 கிலோ வரை மட்டுமே கிடைக்கும் நுனி பசுந்தேயிலையின் மூலம் ஒரு கிலோ சில்வர் டிப்ஸ் டீ கிடைக்கிறது.

இந்த தேயிலை தூளை வெளிநாடுகளில் உள்ள ஏற்றுமதியாளர்கள் ஏலம் எடுத்துள்ளனர். இந்த ஏலத்தில் 4 கிலோ சில்வர் டிப்ஸ் ஏலம் போனது. இது மட்டுமல்லாமல் மற்ற சில தொழிற்சாலைகளின் இலை ரகம், டஸ்ட் ரகம் தேயிலை தூள்களின் விலையும் அதிகமாக கிடைத்தது.

இதையும் படிங்க: நீலகிரியில் தேயிலைத் தூள் உற்பத்தி 18.5% உயர்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.