லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் பண்பாடு மக்கள் தொடர்பகம் சார்பில் தமிழ்நாட்டில் கரோனா பாதித்து ஊரடங்கு உள்ள தற்போதைய சூழ்நிலையில் மக்களின் மனநிலை, பொருளாதார நிலை, அரசிடம் மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன? என்பது குறித்த களஆய்வு முடிவுகள் உதகையில் இன்று வெளியிடப்பட்டது.
இந்த ஆய்வு தமிழ்நாடு முழுவதும் 35 மாவட்டங்களில் 3,500 பேரிடம் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மே 7ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டது. இதில் மத்திய அரசின் முதல் ஊரடங்கு நடவடிக்கை குறித்து உங்கள் கருத்து என்ற கேள்விக்கு சரியான நேரத்தில் எடுத்த முடிவு என 36% பேரும், இன்னும் முன்னதாகவே அறிவித்திருக்க வேண்டும் என 49% பேரும், கருத்து சொல்ல விருப்பம் இல்லை என 15% பேரும் தெரிவித்துள்ளனர்.
கரோனா தடுப்பு நடவடிக்கையில் அதிமுக அரசின் செயல்பாடு எப்படி உள்ளது என்ற கேள்விக்கு நன்று என 34% பேரும், பரவாயில்லை என 53% பேரும், கருத்து இல்லை என 13% பேரும் தெரிவித்துள்ளனர். கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு போதுமான முன்னேற்பாடுகளை செய்துள்ளதா என்ற கேள்விக்கு ஆம் என 23% பேரும், இல்லை என 66% பேரும், கருத்து இல்லை என 11% பேரும் தெரிவித்துள்ளனர். மேலும், முதலமைச்சர் வழங்கிய 1000 ரூபாய் நிவாரண நிதி போதுமானதாக இல்லை என 89% பேர் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, கரோனா குறித்த விழிப்புணர்வு பரப்புரை மக்களிடம் நன்றாக சேர்ந்துள்ளதாக 67% பேரும், கரோனா தடுப்பு நடவடிக்கைகாக தமிழ்நாடு முதலமைச்சர் எதிர்க்கட்சிகளை ஆலோசனை நடத்தாமல் சர்வதிகாரி போல செயல்பட்டதாக 81% பேரும் கூறியுள்ளனர். கரோனா ஊரடங்கு நேரத்தில் அதிமுக, திமுக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடு 30 விழுக்காடு மட்டுமே இருந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
மது கடைகள் திறப்புக்கு 63 % ஆண்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில். 92% பெண்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஊரடங்கு முடிந்த பிறகு தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் ஏற்படும் என 83% பேர் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழ்நாடு அரசு வீட்டு வாடகை, வங்கி கடன், தவணை வாங்க விதித்த உத்தரவை யாரும் பின்னபற்ற வில்லை என்பது தெரியவந்துள்ள நிலையில், தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் வந்தால் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க...மின்சார சட்டத்தை திருத்தும் முடிவையே மத்திய அரசு கைவிட வேண்டும் - ராமதாஸ்