ETV Bharat / state

தண்ணீர் தட்டுப்பாடு - குன்னூர் மலை ரயிலுக்கு சிக்கல்! - Water scarcity

நீலகிரி: குன்னூர் மலை ரயில் நிலையத்தில் போதுமான தண்ணீர் இல்லாததால் நீராவி இன்ஜின்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

train
author img

By

Published : Jun 18, 2019, 10:46 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூரில் பழமை வாய்ந்த மலை நீராவி ரயில், நூற்றாண்டு கடந்தும் இயக்கப்பட்டு வருகிறது. இங்கு காலை, மாலை நேரங்களில் இயக்கப்படும் மலை நீராவி ரயில் என்ஜினுக்கு 2 ஆயிரத்து 500 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. அண்மையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டபோது பல லட்ச ரூபாய் செலவில் போர்வெல் அமைக்கப்பட்டு தண்ணீர் எடுத்து உபயோகப்படுத்தி வந்தனர்.

குன்னூர் மலை ரயில் நிலையம்

தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் தண்ணீர் முறையாக கிடைக்காமல் நீராவி இன்ஜின்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது மட்டுமின்றி ரயில் நிலையங்கள், ரயில்வே குடியிருப்புகள் ஆகிய இடங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.எனவே சுற்றுலா பயணிகள் அதிகம் வரக்கூடிய இப்பகுதிகளில் தண்ணீர் வசதி செய்து தரவும், ரயில் இன்ஜினை தடையின்றி இயக்கவும் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மலை நீராவி ரயில், யுனெஸ்கோ சிறப்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

Intro:குன்னூர் மலை ரயில் நிலையத்தில் போதுமான தண்ணீர் இல்லாததால் நீராவி எஞ்சின் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது பேட்டி உள்ளது

Body:குன்னூர் மலை ரயில் நிலையத்தில் போதுமான தண்ணீர் இல்லாததால் நீராவி எஞ்சின் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது பேட்டி உள்ளது

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.